கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் : 24 பேரை தட்டி தூக்கிய காவல்துறை
கள்ள சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை செய்த 24 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஐபிஎல் கிரிக்கெட்
ஐபிஎல் 2023 கிரிக்கெட் போட்டியின் டிக்கெட்டை கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்றதாக 24 பேரை சென்னை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டிகள் நடைபெறும் போதெல்லாம் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே பரபரப்பான போட்டி நடைபெற்றது.
காவல்துறை கைது
இதனிடையே போட்டிக்கான டிக்கெட்டை கள்ளச்சந்தையில் விற்றதாக 24 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 24 பேரிடம் இருந்து 62 ஐபிஎல் டிக்கெட்டுகள் மற்றும் ரூ.65,700 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இதேபோல சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. அப்பொழுது கூட ஒருநாள் போட்டிக்கான டிக்கெட்டை பிளாக்கில் விற்பனை செய்த 12 பேரை காவல்துறையினர் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.