குஜராத் டைட்டன்ஸ் அணி பயணித்த பேருந்து தீ விபத்து.., உயிர்தப்பிய வீரர்கள்
இந்தியன் பிரீமியர் லீக் 2026 இறுதிப் போட்டி நேற்று குஜராத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்றது.
வெற்றியாளரான ஆர்சிபி அணிக்கு ரூ.20 கோடியும், ரன்னரான குஜராத் அணிக்கு ரூ.12.50 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
#GujaratTitans players narrowly escaped a major accident after a fire broke out in their team bus while returning from the stadium following the #IPL Final. Flames and smoke engulfed the vehicle before security personnel safely evacuated all players. #GT #IPL2026 #ipl20206 pic.twitter.com/k9gSvYyf6T
— Lokmat Times Nagpur (@LokmatTimes_ngp) June 1, 2026
இதனைதொடரந்து, போட்டி முடிந்தவுடன் குஜராத் அணி வீரர்கள் பேருந்தில் தங்கும் விடுதிக்குச் சென்றுகொண்டிருந்தனர்.
அவர்கள் பயணித்த பேருந்தில் மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து ஊழியர்கள் உடனடியாக வீரர்களை பாதுகாப்பாக கீழே இறங்க செய்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்நிலையில், வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் சாலையில் காத்திருந்தனர். இந்த சம்பவம் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.