மீண்டும் ஐ.பி.எல் எந்த தேதியில் தொடங்குகிறது.? வெளியான புதிய தகவல்!
ஐபிஎல் 2021 தொடரில் மீதமுள்ள போட்டிகளை முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துபாய், ஷார்ஜா, அபுதாபியில் போட்டிகளை நடத்துவதற்கான யுஏஇயுடனான பேச்சு வார்த்தை சுமூகமாக முடிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
25 நாட்களில் ஐபிஎல் 2021 தொடரின் மீதமுள்ள போட்டிகளை முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய இயக்குநர் ஆஷ்லி ஜைல்ஸ் ஏற்கெனவே தங்கள் நாட்டு வீரர்களை இதில் அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளார்.
ஆகவே பிசிசிஐ சுயநல நோக்கோடு நஷ்டம் ஏற்படக்கூடாது என்பதற்காக ஐபிஎல் தொடரை விடாப்பிடியாக நடத்துவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அதே சமயம், ஐபிஎல் போட்டிகள் நடக்காவிட்டால் பிசிசிஐக்கு சுமார் ரூ.2000 கோடி இழப்பு ஏற்படும் என்று கங்குலி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்னும் 31 போட்டிகள் மீதமுள்ளன, நடந்து முடிந்த போட்டியில்டெல்லி கேப்பிடல்ஸ் முதலிடத்திலும் சிஎஸ்கே 2ம் இடத்திலும் உள்ளது.