ஐபிஎல் கிரிக்கெட்: பஞ்சாப் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி

 ஐபிஎல் கிரிக்கெட்டில் பஞ்சாபி அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி அணி.

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணியின் வீரர் ஷிகர் தவான் அரை சதம் அடித்து அந்த அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய 29-வது ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் 99 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதனையடுத்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.

அந்த அணி 17.4 ஓவரில் 3 விக்கெட் மட்டும் இழந்து 167 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷிகர் தவான் 69 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்