ipl 2021 : மிரட்டிய டெல்லி .. சொதப்பிய மும்பை : டெல்லி அணிக்கு 130 ரன்கள் இலக்கு

ipl2021 delhicapitals mumbaiindians
By Irumporai Oct 02, 2021 12:29 PM GMT
Report

ஐ.பி.எல். தொடரில் ஷார்ஜாவில் இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதின. மும்பை அணிக்கு வாழ்வா? சாவா? என்ற நிலையில் நடைபெறும் இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி டாஸ் வென்றது.

டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது டாஸ் வென்ற தில்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. தில்லி அணியில் லலித் யாதவுக்குப் பதிலாக பிருத்வி ஷா இடம்பெற்றுள்ளார். மும்பை அணியில் ராகுல் சஹாருக்குப் பதிலாக ஜெயந்த் யாதவ் இடம்பெற்றனர்.

ஐபிஎல் 2021 போட்டியில் சிறப்பாகப் பந்துவீசி வரும் அவேஷ் கான், மும்பை கேப்டன் ரோஹித் சர்மாவை 7 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் அஸ்வின் பந்தில் ஒரு சிக்ஸர் அடித்தார். 6 ஓவர்களில் மும்பை அணி 1 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்தது.

7-வது ஓவரில் டி காக்கின் விக்கெட்டை 19 ரன்களில் வீழ்த்தினார் அக்‌ஷர் படேல். அஸ்வினின் 2-வது ஓவரில் இரு பவுண்டரிகள் அடித்தார் சூர்யகுமார். மும்பை அணி 10-வது ஓவரின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்தது. . டெல்லி அணி சூர்யகுமார் யாதவ் தவிர பிற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ள நிலையில், மும்பை அணியின் நட்சத்தர வீரர் பொல்லார்ட் நோர்ட்ஜே போல்டாகி வெளியேறினார்.

இதனால், மும்பை வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். 20வது ஓவரை அஸ்வின் வீசினார். அவர் வீசிய முதல் பந்திலே ஜெயந்த் யாதவ் பந்தை சிக்ஸருக்கு அனுப்பினார். ஆனால், அடுத்த பந்தில் ஜெயந்த் அவுட்டாகினார்.

இறுதியில் மும்பை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது.முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி ஆவேஸ்கான் மற்றும் அக்‌ஷர் படேல் பந்துவீச்சில் தடுமாறி 129 ரன்கள் மட்டுமே எடுத்தது.