ஐபிஎல் கிரிக்கெட்: இன்றைய போட்டியில் டெல்லி - மும்பை அணிகள் பலப்பரீட்சை

fans mumbai delhi ipl intrest
By Praveen Apr 20, 2021 09:59 AM GMT
Report

ஐபிஎல் கிரிக்கெட்டின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

நடப்பு ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு பலப்பரிட்சையில் ஈடுபட உள்ளன.

இரு அணிகளும் இதற்கு முன்னதாக 3 போட்டிகளில் விளையாடி 2ல் வெற்றி பெற்றுள்ளன. புள்ளிகளின் அடிப்படையில் டெல்லி அணி 3ம் இடத்திலும், மும்பை அணி 4ம் இடத்திலும் உள்ளன.

டெல்லி அணியானது கடந்த ஆட்டத்தின் போது மும்பையின் வான்கடே மைதனத்தில் வைத்து பஞ்சாப் அணியை தோற்கடித்ததன் மூலம் தொடர்ச்சியான இரண்டு வெற்றியை பதிவு செய்தது. அதே சமயம் மும்பை அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது வெற்றியை தொடர்ந்து பதிவு செய்து வருகிறது.

இன்றைய ஆட்டத்தில் மும்பை அணியில் தொடக்க வீரர்களாககுயின் டன் டி கோக் மற்றும் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்குவார்கள். இன்றைய ஆட்டத்தில் மும்பை அணியின் முக்கிய வீரர்களாக சூர்யகுமார் யாதவ், இசான் கிசன், பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா மற்றும் குருனால் பாண்டியா போன்ற வீரர்கள் தங்களது அதிரடியான ஆட்டத்தை எந்த ஒரு இக்கட்டான நிலையிலும் வெளிப்படுத்தும் திறன் கொண்டவர்கள்.

ஆனால், அவர்கள் அனைத்து ஆட்டங்களிலும் சோபிப்பதில்லை. டெல்லி கேபிடல்ஸை பொறுத்தவரையில், அந்த அணி அடித்த அதிகபட்ச ரன்னான 198 ரன்களில் தவான் ஒருவரே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 92 ரன்கள் குவித்திருந்தார். டெல்லியில் தவான் மற்றும் பிருத்வி ஷா ஒரு சிறப்பான தொடக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இரு அணியை பொறுத்த வரையிலும் சிறந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்களைக் கொண்டுள்ளன.

டெல்லி அணி உத்தேச வீரர்கள் விவரம்: பிருத்வி ஷா, ஷிகர் தவான், ஸ்டீவன் ஸ்மித், ரிஷப் பண்ட் (கேப்டன்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், லலித் யாதவ், கிறிஸ் வோக்ஸ், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, அவேஷ் கான், லுக்மான் மேரிவாலா

மும்பை இந்தியன்ஸ் அணி உத்தேச வீரர்கள் விவரம்: ரோகித் சர்மா (கேப்டன்), குயின்டன் டி கோக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, கீரோன் பொல்லார்ட், குருனல் பாண்டியா, ராகுல் சாஹர், ஆடம் மில்னே, ஜஸ்பிரித் பும்ரா, டிரென்ட் போல்ட்