இதுனாலதான் சிஎஸ்கே ரெய்னாவை ஓரம் கட்டியதா ?

SureshRaina IPLMegaAuction2022
By Irumporai Feb 13, 2022 04:51 AM GMT
Report

இந்த முறை ஐபிஎல் தொடரில் சி.எஸ்கே அணி சுரேஷ் ரெய்னாவை முதல் சுற்றில் எடுக்கவில்லை. இது ரெய்னா ரசிகர்கள் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்நிலையில் சிஎஸ்கே அணி ரெய்னாவை குறிவைக்காததற்கு காரணம் என்ன வாருங்கள் காண்போம்

ஐபிஎல் தொடரில் தோனியை போல் 2008ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா விளையாடி வருகிறார். இவர் மொத்தம் நடைபெற்றுள்ள 14 ஐபிஎல் தொடர்களில் 12ல் சிஎஸ்கே அணிக்காக விளையாடியுள்ளார்.

இதன்காரணமாகவே இவரை சென்னை ரசிகர்கள் சின்ன தல என்று பாசமாக அழைப்பார்கள்.

இதுனாலதான்  சிஎஸ்கே ரெய்னாவை  ஓரம் கட்டியதா ? | Ipl Mega Auction Csk Didnot Bid For Suresh Raina

2008ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐபிஎல் சீசனில் 421 ரன்கள் விளாசினார். அதன்பின்னர் இரண்டாவது சீசனில் 434 ரன்கள் அடித்தார். 2014ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் வரை சுரேஷ் ரெய்னா அனைத்து சீசன்களிலும் சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக விளையாடி ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.

இதுனாலதான்  சிஎஸ்கே ரெய்னாவை  ஓரம் கட்டியதா ? | Ipl Mega Auction Csk Didnot Bid For Suresh Raina

இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு முதல் இவரது ஆட்டம் சரிய தொடங்கியது  அந்த ஆண்டு நடைபெற்ற 17 போட்டிகளில் விளையாடி 383 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

பேட்டிங் மட்டுமல்லாமல் ஃபீல்டிங்கிலும் இவர் சற்று மோசமாக செயல்பட தொடங்கியதாக இவர் மீது விமர்சனம் வரத் தொடங்கியது , இந்த நிலையில் தான் 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து சொந்த காரணங்களுக்காக இவர் திடீரென விலகினார்.

இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரிலிம் மொத்தமாக 160 ரன்கள் மட்டுமே அடித்தார். இதன்காரணமாக சிஎஸ்கே அணியில் ரெய்னா  அதிகமாக முக்கியத்துவம் பெறவில்லை என கூறப்படுகிறது

கடந்த ஐபிஎல் தொடரில் கூட இறுதிப் போட்டியில் சுரேஷ் ரெய்னாவிற்கு பதிலாக ராபின் உத்தப்பா களமிறக்கப்பட்டார். ஆகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரெய்னாவை தாண்டி இளம் வீரர்கள் பக்கம் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது 

இதன்காரணமாகவே சுரேஷ் ரெய்னாவிற்கு சென்னை அணி இம்முறை ஏலத்தில் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.