தேர்தல் எதிரொலி - திடீரென மாற்றப்பட்ட IPL போட்டிகள்...அதிர்ச்சியில் ரசிகர்கள்..?
நடைபெற்று வரும் IPL தொடரின் இரண்டு போட்டிகள் வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன.
IPL தொடர்
2024-ஆம் ஆண்டிற்கான IPL தொடர் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இது வரை 14 போட்டிகள் முடிந்துள்ளன. இவற்றில் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
அதனை தொடர்ந்து 2 போட்டிகளில் 2-லும் வெற்றி பெற்று 2-வது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், 3-வது இடத்தில் 3 போட்டிகளில் 2 வெற்றி 1 தோல்வியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது.
Re-schedule
இன்றைய லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. தற்போது வெளியாகியுள்ள செய்தியின் படி, தொடரின் 2 லீக் போட்டிகள் re -schedule செய்யப்பட்டுள்ளன.
வரும் 17 ஆம் தேதி நடைபெறவிருந்த ராஜஸ்தான் - கொல்கொதா அணிகளுக்கு இடையேயான போட்டி தற்போது 16-ஆம் தேதி மாற்றப்பட்டுள்ளது.
அதே போல, 16-ஆம் தேதி நடைபெறவிருந்த குஜராத் - டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி 17-ஆம் தேதி மாற்றப்பட்டுள்ளது.
19-ஆம் தேதி மேற்குவங்கத்தில் தேர்தல் நடைபெறும் காரணத்தால், போலீஸ் தரப்பில் பாதுகாப்பு பிரச்சனை வரும் என அறிவுறுத்தப்பட்ட நிலையில், இந்த மாறுதல் கொண்டுவரப்பட்டுள்ளது.