இறுதி போட்டியில் இந்த அணி தான் வெற்றி பெறும் - புள்ளி விவரங்கள் சொல்வது என்ன?
நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணியால் ப்ளே ஆஃபிற்கு தகுதி பெற்று அசத்திய தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி அணிக்கு எதிரான முதல் குவாலிபயர் போட்டியிலும் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.
அதே போல், இந்த தொடரின் முதல் பாதியில் மிக மோசமாக விளையாடி புள்ளி பட்டியலில் கிட்டத்தட்ட கடைசி இடத்தில் இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ், துபாயில் நடைபெற்று வரும் இரண்டாம் பாதியில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது மட்டுமல்லாமல், இரண்டாவது குவாலிபயர் போட்டியில் டெல்லியை வீழ்த்தி இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் சாம்பியனை தீர்மானிக்கும் இறுதி போட்டி இன்று நடைபெற உள்ளது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த போட்டிக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர். கொல்கத்தா அணி இதுவரை 2 முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை மூன்று முறையும் வென்றுள்ளது.
இரு அணியின் கேப்டனுமே தங்களது அணிக்காக உலகக்கோப்பையை வென்று கொடுத்த நாயகர்கள் என்பதால் இந்த போட்டிக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் வெறித்தனமாக காத்துள்ளது. சென்னை அணி இந்த சீசனில் 2-வது பேட்டிங் செய்த ஆட்டங்களில் தோற்றதில்லை. 6 முறை வெற்றிகரமாக சேசிங் செய்திருக்கிறது. அதனால் டாஸ் ஜெயித்தால் 2-வது பேட்டிங்குக்கே முன்னுரிமை கொடுப்பார்கள். நெருக்கடியை சாதுர்யமாக கையாளும் தோனியின் கேப்டன்ஷிப்பில் சென்னை அணி 4-வது முறையாக (ஏற்கனவே 2010, 2011, 2018-ம் ஆண்டுகளில் பட்டம் வென்றுள்ளது) பட்டத்தை உச்சிமுகருமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.
அதே வேளையில், கடந்த தொடர்களில் இரண்டு முறை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இரண்டு முறையுமே கோப்பையை வென்று, இறுதி போட்டியில் தோல்வியை சந்திக்காத அணியாக உள்ளது. இறுதி போட்டி நடைபெறும் ஆடுகளம் இரண்டாவதாக பேட்டிங் செய்பவர்களுக்கே சாதகமாக இருக்கும் என தெரிகிறது.
இதுவரை இந்த மைதானத்தில் இரண்டாவது பேட்டிங் செய்த அணிகள் 9 முறை வெற்றி பெற்றுள்ளன, இரண்டு முறை மட்டுமே தோல்வியடைந்துள்ளன. எனவே இந்த போட்டியில் டாஸ் மிக முக்கிய பங்காற்றும் என தெரிகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இதுவரை 27 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே 17 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக துபாய் மைதானத்தில் நடைபெற்றுள்ள மூன்று போட்டிகளில் சென்னை அணியே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகள் இடையேயான பலம், பலவீனம் மற்றும் பழைய புள்ளி விபரங்கள் ஆகியவற்றை வைத்து பார்க்கும் பொழுது இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan
