வெற்றி பெறுவது யார்? டாஸ் வென்ற கொல்கத்தா - முதலில் சிஎஸ்கே பேட்டிங்
நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன், பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
துபாய் மைதானத்தில் இலக்கை விரட்டும் அணிகளே பெரும்பாலும் போட்டியை வென்றுள்ளன. இங்கு நடைபெற்ற கடைசி 8 போட்டிகளில் இரண்டாவதாக பேட் செய்த அணி வென்றுள்ளது. அதே நேரத்தில் இந்த ஆட்டம் நடைபெற உள்ள ஆடுகளத்தில் கடந்த செப்டம்பர் 19 அன்று நடைபெற்ற போட்டியில் சென்னை முதலில் பேட் செய்து 156 ரன்கள் எடுத்து மும்பையை வீழ்த்தியிருந்தது.
இந்த ஆடுகளம் அந்த போட்டிக்கு பிறகு இப்போது தான் பயன்படுத்தப்படுகிறது. இரு அணிகளும் ஐபிஎல் அரங்கில் 25 முறை நேருக்கு நேர் விளையாடி உள்ளன. அதில் சென்னை 16 வெற்றிகளையும், கொல்கத்தா 8 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளது. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.
ருதுராஜ் கெய்க்வாட், டூப்ளசிஸ், ராபின் உத்தப்பா, மொயின் அலி, அம்பதி ராயுடு, தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், டுவைன் பிராவோ, தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட். ஷூப்மன் கில், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), மோர்கன் (கேப்டன்), ஷகிப் அல் ஹசன், சுனில் நரைன், லோக்கி ஃபெர்குசன், ஷிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி.
ரெய்னா இல்லாமல் சென்னை அணி முதல் முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. நடப்பு சீசனின் நாக் அவுட் போட்டிகள் மூன்றிலும் கொல்கத்தா கேப்டன் மோர்கன் டாஸ் வென்றுள்ளார்.

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan
