அடுத்த ஐபிஎல் தொடரில் தோனி சென்னை அணிக்காக விளையாட வாய்ப்பே இல்லை - முன்னாள் வீரர் பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி

dhoni csk ipl simon
By Anupriyamkumaresan Nov 29, 2021 11:54 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கிரிக்கெட்
Report

 எம்.எஸ். தோனி அடுத்த ஆண்டு சிஎஸ்கே விற்க்காக முழு சீசனிலும் விளையாடுவார் என்று எதிர்பார்க்க வேண்டாம் என்று சைமன் டவுல் தெரிவித்திருக்கிறார்.

ஐபிஎல் 2022 மெகா ஏலம் நடக்கவிருக்கிறது அதற்காக பங்கு பெறும் 10 அணிகள் தங்களின் முக்கிய வீரர்களை எழுத்திற்கு விடாமல் தக்கவைத்துக்கொள்ள நவம்பர் 30-ஆம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதற்காக அணிகள் தங்களது வீரர்களிடம் தீவிர பேச்சுவார்தை நடத்தி வருகிறது.

அடுத்த ஐபிஎல் தொடரில் தோனி சென்னை அணிக்காக விளையாட வாய்ப்பே இல்லை - முன்னாள் வீரர் பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி | Ipl Match Csk Dhoni Not Play Next Year Fans Shock

இதில் பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களது கணிப்புகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நியூசிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் தற்போதைய வர்ணனையாளருமான சைமன் டபுல், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் நடுவில் அளித்த பேட்டியில் ஐபிஎல் 2022ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக முழு சீசனிலும் கேப்டன் எம் எஸ் தோனி விளையாடுவாரா என்பது உறுதியாக தெரியவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அவர் அளித்த பேட்டியில் “சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியை தக்கவைத்துக்கொள்ள வாய்ப்புள்ளது ஆனால் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முழு சீசனிலும் விளையாடுவாரா என்பது உறுதியாக தெரியவில்லை.

எம்எஸ் தோனி முழு சீசனையும் விளையாடுவார் என்று நான் நினைக்கவில்லை ஆனால் ஹோம் கேம் இருக்கும் அது எம் எஸ் டி யின் கடைசி ஆட்டமாக இருக்கும் அங்கிருந்து தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் ஃபாஃப் டுபிளெசிஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்பார் அதுதான் எனது எண்ணம்” என்றும் அவர்கள் அறிவிப்பார்கள் என்று சைமன் கூறியிருக்கிறார்.

அடுத்த ஐபிஎல் தொடரில் தோனி சென்னை அணிக்காக விளையாட வாய்ப்பே இல்லை - முன்னாள் வீரர் பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி | Ipl Match Csk Dhoni Not Play Next Year Fans Shock

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரவீந்திர ஜடேஜா,ருத்துராஜ் கெய்க்வாட், தோனி, ஃபாஃப் டுபிளெசிஸ் ஆகிய நான்கு வீரர்களை ஏலத்திற்கு விடாமல் தக்க வைத்துக் கொள்ளும் எனவும் அவர் கணித்திருக்கிறார்.

சென்னையில் நடந்த ஒரு பாராட்டு விழாவில் பேசிய தோனி எனது கடைசி டி20 போட்டி சென்னையில் நடக்கும் என நம்புகிறேன் அடுத்த வருடம் நடக்குமா அல்லது இன்னும் ஐந்து வருடம் கழித்து நடக்குமா என்பது எனக்கு தெரியாது என்று சூசகமாக தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.