பிரபல ஐபிஎல் அணிக்கு கோச்சாகும் ரவி சாஸ்திரி - நீண்ட நேர பேச்சுவார்த்தை? என்ன நடந்தது?

Ravi Shastri ipl match
By Anupriyamkumaresan Nov 07, 2021 08:05 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கிரிக்கெட்
Report

இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரியை திடீரென ஐபிஎல் அணி ஒன்று அனுகியுள்ளது. ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த அக்டோபர் 17ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இதற்கு காரணம் கோலி மற்றும் ரவி சாஸ்திரி தான். இந்த உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணி கேப்டன் விராட் கோலி பதவி விலகவுள்ளார். இதே போல இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் இந்த தொடருடன் முடிவடைகிறது. அவருக்கு மாற்றாக புதிய பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுவிட்டார்.

பிரபல ஐபிஎல் அணிக்கு கோச்சாகும் ரவி சாஸ்திரி - நீண்ட நேர பேச்சுவார்த்தை? என்ன நடந்தது? | Ipl Match Coacher Ravi Shashtri Discussion

இந்நிலையில் ரவி சாஸ்திரி பதவி விலகியவுடன் அவரை தங்கள் பக்கம் இழுத்துக்கொள்ள ஐபிஎல் அணிகள் போட்டி போட்டு வருகின்றனர். அந்தவகையில் புதிதாக வந்துள்ள அகமதாபாத் அணிக்கு தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்க பேச்சுவார்த்தை நடத்தி வெற்றி கண்டுள்ளதாக தெரிகிறது. இதே போல பவுலிங் கோச்சாக பரத் அருண், பீல்டிங் கோச்சாக ஆர்.ஸ்ரீதர் ஆகியோர் செயல்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர்கள் இருவரும் தற்போது இந்திய அணி பயிற்சியாளராக செயல்பட்டு வருகின்றனர். அகமதாபாத் அணியை சிவிசி கேபிடல்ஸ் நிறுவனம் ரூ. 5,625 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் ஹோம் கிரவுண்டாக உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றாக பார்க்கப்படும் நரேந்திர மோடி மைதானம் இருக்கப்போகிறது.

பிரபல ஐபிஎல் அணிக்கு கோச்சாகும் ரவி சாஸ்திரி - நீண்ட நேர பேச்சுவார்த்தை? என்ன நடந்தது? | Ipl Match Coacher Ravi Shashtri Discussion

இப்படி பல்வேறு சிறப்புகளுடன் களமிறங்கும் அகமதாபாத் அணிக்கு ரவி சாஸ்திரி பயிற்சியாளர் ஆவது குறித்த அறிவிப்பு டி20 உலகக் கோப்பை முடிந்தவுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் இரு புதிய அணிகளுக்கும் பல்வேறு சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதாவது மெகா ஏலத்திற்கு முன்பாகவே 2 இந்திய வீரர்கள் மற்றும் 1 அயல்நாட்டு வீரரை நேரடியாக இந்த அணிகள் ஒப்பந்தம் செய்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.