இந்த ஒரே ஒரு வார்த்தைதான் சென்னை அணியின் வெற்றிக்கு ரகசியம்: சுரேஷ் ரெய்னா அதிரடி
ஐபிஎல் 2021 கோப்பையை கேப்டன் தோனிக்காக வெல்ல வேண்டும் என்ற நோக்கதோடே சென்னை வீரர்கள் விளையாடியதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். கடந்த வருட ஐபிஎல் தொடரில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதல்முறையாக ப்ளே ஆஃப் தவறவிட்டதோடு முதல் அணியாக ப்ளே வாய்ப்பையும் இழந்து வெளியேறியது.
இந்த வீரர்களை வைத்து கொண்டு இனி சென்னை அணியால் எதுவும் செய்ய முடியாது, வீரர்கள் அனைவரையும் மாற்றும் வரை சென்னை அணிக்கு விடிவுகாலம் பிறக்காது என்றே பெரும்பாலான முன்னாள் வீரர்கள் கணித்திருந்தனர், ஆனால் இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடரின் துவக்கத்தில் இருந்தே மெர்சலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிநடை போட்ட சென்னை படை, முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் கால் பதித்து, சாம்பியன் பட்டத்தையும் தட்டி தூக்கியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த திடீர் எழுச்சிக்கு அந்த அணியின் அனைத்து வீரர்களின் கடின உழைப்பும், முயற்சியும் தான் காரணம் என்றாலும், அதில் அந்த அணியின் துவக்க வீரரான ருத்துராஜ் கெய்க்வாட்டே முதன்மையான காரண கர்த்தாவாக இருப்பார்.
ஒவ்வொரு போட்டியிலும் சென்னை அணிக்கான தனது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்து அசத்திய ருத்துராஜ், நடப்பு தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் வரிசையிலும் முதலிடத்தை பிடித்து ஆர்ஞ்சு நிற தொப்பியையும் தட்டி சென்றார். இந்தநிலையில், சென்னை அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த ருத்துராஜ் கெய்க்வாட்டை பாராட்டி பேசியிருந்த சின்ன தல சுரேஷ் ரெய்னா, தோனிக்காக ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னை அணி விளையாடிய தகவலையும் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து பேசிய சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் கோப்பையை நாங்கள் தோனிக்காக வெல்ல வேண்டும் என நோக்கத்துடன் தான் விளையாடினோம். அதே போல் ஐபிஎல் தொடரை நேரில் வந்து பார்க்க முடியாத எங்களது ரசிகர்களுக்காகவும் ஐபிஎல் கோப்பையை வெல்ல நினைத்தோம்.
இந்த தொடர் மிக கடினமாக இருந்தது, ரசிகர்களின் மிகப்பெரும் ஆதரவே எங்களுக்கு ஊக்கத்தையும் கொடுத்தது. தோனி போன்ற ஒரு மிகப்பெரும் தலைவனின் வழிநடத்தலில் விளையாடினாலும் எப்படிப்பட்ட வீரருக்கும் வெற்றி ஒன்று மட்டுமே நோக்கமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan

பாகிஸ்தான் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்புகள்..! சிறிலங்கா எயார்லைன்ஸின் அவசர அறிவிப்பு IBC Tamil
