எனக்கு கேப்டன் பதவியே வேண்டாம் கொந்தளித்த தோனி : காரணம் என்ன?
சென்னை அணியின் வேக பந்துவீச்சின் தரம் இன்னும் உயர வேண்டும் என தோனி கூறியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று சிஎஸ்கே மற்றும் லக்னோ அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் 57 ரன்களும் டிவோன் கான்வே 47 ரன்களும் விளாசி சிறப்பான அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.
அதன் பிறகு களமிறங்கிய மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ் , ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினார். அப்போது கடைசி ஓவரில் களம் இறங்கிய தோனி சிக்சர் விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் , கடைசி நேரத்தில் அம்பத்தி ராயுடு பொறுப்பாக ஆடி ரன் சேர்க்க 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதன் பின்னர் களம் இறங்கிய லக்னோ அணி விக்கெட்டை பறிகொடுத்தாலும், கடைசிக் கட்டத்தில் நிகோலஸ் பூரன் மற்றும் அயூஸ் படோனி சென்னை அணிக்கு அச்சத்தை ஏற்படுத்தினர்.
தோனி எச்சரிக்கை
இருப்பினும், கடைசிக் நேரத்தில் சென்னை வீரர்கள் நேர்த்தியாக பந்துவீசியதால், 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் மட்டுமே சேர்த்ததுஇதன் மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி, சென்னை அணி, தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. போட்டிக்கு பின்னர் பேசிய தோனி, எங்கள் பந்துவீச்சாளர்கள் நிறைய நோபால் (NO-Ball) மற்றும் வைட் (Wide) பந்துகளை வீசினர்.
நிச்சயமாக இதுநல்ல விஷயம் கிடையாது. நோபால் வீசுவதை கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும் . அணியின் வேகப்பந்துவீச்சு தரம் இன்னும் உயர வேண்டும். மைதானம், பிட்ச் மற்றும் சூழலுக்கு ஏற்றவாறு பந்துவீச கற்றுக்கொள்ள வேண்டும். எதிரணி வீரர்கள் என செய்கிறார்கள் என கவனிக்க வேண்டும்.
அந்த யுக்தியை பயன்படுத்த வேண்டும். நோபால் வீசுவதை பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்த வேண்டும் இல்லையென்றால் வீரர்கள் புதிய கேப்டன் கீழ் விளையாட நேரிடும் என தனது பாணியில் எச்சரித்தார்.