ஐபிஎல் கிரிக்கெட்: வெற்றியை தொடரும் முனைப்போடு சென்னை அணி மும்பையை எதிர்கொள்கிறது

 ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை மும்பை மோதுகின்றன.

ஐபிஎல் 14ஆவது சீசன் 27ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன. சிஎஸ்கே மொத்தம் 6 போட்டிகளில் பங்கேற்று ஒரேயொரு தோல்வியை மட்டும் சந்தித்து புள்ளிப்பட்டியலின் முதலிடத்தில் நீடிக்கிறது.

நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி மொத்தம் 6 போட்டிகளில் பங்கேற்று 6 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் நீடிக்கிறது. இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றிபெற்றால் மட்டுமே நான்காவது இடத்தை தக்கவைக்க முடியும் என்பதால், இன்றைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேருக்கு நேர்:

இரு அணிகளும் 30 முறை நேருக்கு நேர் மோதி, அதில் மும்பை இந்தியன்ஸ் அணி 18 முறை வெற்றிபெற்றுள்ளது. சிஎஸ்கே அணி 12 முறை மட்டுமே வென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் அதிகபட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 208 ரன்கள் குவித்துள்ளது. குறைந்தபட்சமாக சிஎஸ்கே 79 ரன்கள் அடித்துள்ளது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்