தல போல வருமா.. பட்டைய கிளப்பிய உத்தப்பா .. கெத்து காட்டிய தோனி.. இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சென்னைபடை

dhoni ipl2021 thaladhoni DelhiCapitals CSKvDC
By Irumporai Oct 10, 2021 06:13 PM GMT
Report

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

14-வது ஐபிஎல் லீக் போட்டிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இறுதி சுற்றுக்கான தகுதி போட்டிகள் தொடங்கியுள்ளன. இதில், முதல் நான்கு இடங்களில் உள்ள அணிகள் மோதுகின்றன. இன்றைய ஆட்டத்தில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதல் பேட்டிங் செய்த டெல்லி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது.

173 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் சென்னை தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பாப் டு பிளெஸ்ஸி களமிறங்கினர். அன்ரிச் நோர்க்கியா வீசிய முதல் ஓவரிலேயே டு பிளெஸ்ஸி 1 ரன்னுக்கு போல்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.

இதன்பிறகு, ராபின் உத்தப்பா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்தனர். 10 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 1 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்திருந்தது. உத்தப்பா அரைசதம் அடித்து 51 ரன்களும், ருதுராஜ் 27 ரன்களும் எடுத்திருந்தனர்.

இதன்பிறகு, அக்ஷர் படேல் ஓவரில் சிக்ஸரும், பவுண்டரியும் அடித்து மீண்டும் சற்று அதிரடிக்கு மாறினார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் ஓவரில் உத்தப்பாவும் இரண்டு பவுண்டரிகள் அடித்து மீண்டும் ரன் ரேட்டை உயர்த்தினார்.

சென்னை பேட்டிங் நல்ல நிலையில் சென்றுகொண்டிருந்தபோது டாம் கரன் பந்தில் ஷ்ரேயஸ் ஐயரின் சிறப்பான கேட்ச்சில் உத்தப்பா 63 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். உத்தப்பா, ருதுராஜ் இணை 2-வது விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்தது.

பரிசோதனை முயற்சியாக ஷர்துல் தாக்குர் முன்கூட்டியே களமிறக்கப்பட்டார். அது பலனளிக்கவில்லை. முதல் பந்திலேயே அவர் ஆட்டமிழந்தார். இதிலிருந்து மீள்வதற்குள் அம்பதி ராயுடு அடுத்த ஓவரில் 1 ரன்னுக்கு ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

இதனால், ஆட்டம் டெல்லி பக்கம் திரும்பியது.  ஆனாலும் அரைசதம் அடித்து விளையாடி வந்த ருதுராஜ் நம்பிக்கையாய் களத்தில் இருந்தார்.

கடைசி 5 ஓவர்களில் சென்னை வெற்றிக்கு 52 ரன்கள் தேவைப்பட்டன.  18-வது ஓவரை நோர்க்கியா மீண்டும் வீச ருதுராஜ் இரண்டு பவுண்டரிகள் அடித்து அசத்தினார்.

4 பந்துகளில் 9 ரன்கள் தேவை: அடுத்த பந்தும் 'எட்ஜ்' பட்டு பவுண்டரி போக கடைசி 3 பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்டன.

இறுதியாக 6 விக்கெட் விழுந்திருந்த நிலையில், கூல் கேப்டன் தோனி களமிறங்கினார். ஏறத்தாழ ஒவ்வொரு பந்துகளுக்கும் 2க்கும் அதிகமான ரன்கள் தேவையிருந்தது.

இந்நிலையில் கடைசி மூன்று பந்துகளில் 4 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் ஒரு பந்து வொய்ட்-ஆக போனது. அடுத்த பந்தில் தோனி பவுண்ட்ரி விளாச சென்னை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.