ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணியை பழிதீர்த்தது டெல்லி அணி

cricket mumbai delhi ipl victory
By Praveen Apr 20, 2021 06:16 PM GMT
Report

ஐபிஎல் தொடரின் 13-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது. டி காக் 1 ரன்னில் வெளியேறினார். இரண்டாவது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

சூர்யகுமார் யாதவ் 24 ரன்களும், ரோகித் சர்மா 44 ரன்களும் எடுத்தனர். அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா (0), பொல்லார்டு (2) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். இஷான் கிஷனை 26 ரன்னில் வீழ்ந்தார். இறுதியில், மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 137 ரன்கள் அடித்துள்ளது. டெல்லி அணி சார்பில் அமித் மிஷ்ரா 4 விக்கெட்டும், அவேஷ் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. பிரித்வி ஷா 7 ரன்ன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஸ்மித் ஷிகர் தவானுடன் சேர்ந்து பொறுப்புடன் ஆடினார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 53 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்மித் 33 ரன்னில் வெளியேறினார்.

அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷிகர் தவான் 45 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ரிஷப் பண்ட் 7 ரன்னில் பெவிலியன் திரும்பினார். கடைசி 3 ஓவரில் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது.

18வது ஒவரில் ஹெட்மயர் பவுண்டரி அடிக்க 7 ரன்கள் கிடைத்தது. 19வது ஓவரில் 10 ரன்கள் கிடைத்தது. லலித் யாதவும் ஹெட்மயரும் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இறுதியில், டெல்லி அணி 4 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் டெல்லி அணி தனது 3வது வெற்றியை பதிவு செய்தது.