டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டனாக ரிஷப் பன்ட் நியமனம்!
ஐபிஎல் போட்டிகளில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு கேப்டனாக ரிஷப் பன்ட்டை நியமித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பினை அணி நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. இந்தியாவில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவை பெற்ற ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் செப்டம்பர் 19-ம் தேதி துவங்க உள்ளது.
கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் இந்தியாவில் நடைபெற்று வந்த போட்டிகள் கொரோனா தொற்றினால் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது அவை கடந்த ஆண்டை போலவே ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு அதற்கான முன்பதிவும் துவங்கி உள்ளது. இதனால் போட்டியில் ரசிகர்களின் ஆதரவுடன் வீர்ரகள் களமிறங்குவர்.
முதல் போட்டியில் முன்னாள் சாம்பியன் சென்னை மற்றும் நடப்பு சாம்பியன் மும்பை ஆகிய பலம் வாய்ந்த இரு அணிகள் மல்லுக்கட்ட உள்ளன. இதில் கலந்து கொள்ளும் அணிகளில் ஒன்று டெல்லி கேப்பிடல்ஸ்.
அந்த அணியை ஷ்ரேயஸ் ஐயர் வழிநடத்தி வந்தார். அவரது தலைமையின் கீழ் கடந்த ஆண்டில் பைனல் வரை அந்த அணி முன்னேறியது. ஆனால் தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தினால் தற்போது ஷ்ரேயஸ் ஐயர் ஓய்வில் உள்ளதால் அணியை ரிஷப் பன்ட் வழிநடத்தி வருகிறார்.
சிறப்பான கேப்டன்ஷிப்பை வெளிப்படுத்தும் பண்ட அணியை தற்போது நல்ல முறையில் வழி நடத்துகிறார். நடப்பு சீசனின் முதற்கட்ட போட்டிகளின் முடிவில் டெல்லி அணி பட்டியலில் முதல் இடத்தில உள்ளது.
தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் டெல்லி அணி இந்த முறை கோப்பை வென்று சரித்திரம் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி அணி இரண்டாம் கட்டத்தில் தனது முதல் ஆட்டத்தை வரும் செப் 22ம் தேதி அன்று ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள உள்ளது.