ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத் அணியில் களமிறங்குகிறார் முன்னாள் சென்னை வீரர்

Praveen
in கிரிக்கெட்Report this article
ஐபிஎல் கிரிக்கெட் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராக களமிறங்கும் ஐதராபாத் அணியில் முன்னாள் சென்னை வீரர் கெதர் ஜாதவ் இடம்பெற்றுள்ளார்.
சென்னையில் நடைபெறும் ஐபிஎல் ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.இதுவரை விளையாடிய மூன்று ஆட்டங்களில் பஞ்சாப் அணி ஒரு வெற்றியைப் பெற்றுள்ளது. சன்ரைசர்ஸ் அணி இதுவரை ஒரு வெற்றியையும் பெறவில்லை.
இதனால் இரு அணிகளுக்கும் இந்த ஆட்டம் முக்கியமானதாக உள்ளது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. அந்த அணியில் மூன்று மாற்றங்கள். ஃபெபியன் ஆலன், மோசஸ் ஹென்ரிகஸ், எம். அஸ்வின் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளார்கள். சன்ரைசர்ஸ் அணியில் கேன் வில்லியம்சன், கெதர் ஜாதவ் இடம்பெற்றுள்ளார்கள்.
சிஎஸ்கே அணியில் விளையாடி வந்த கெதர் ஜாதவ், முதல்முறையாக சன்ரைசர்ஸ் அணியில் விளையாடுகிறார். மணிஷ் பாண்டேவுக்குப் பதிலாக சித்தார்த் கெளல் இடம்பெற்றுள்ளார்.