ஐபிஎல் போட்டியில் விடுவிக்கும் வீரர்களின் பெயர்கள் இன்று அறிவிப்பு...!

Cricket
By Nandhini Nov 15, 2022 05:11 AM GMT
Report

ஐபிஎல் கலந்து கொள்ளும் 10 அணிகள் விடுவிக்கும் வீரர்களின் பெயர்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளது.

T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -

ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வந்த 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 13ம் தேதி நிறைவடைந்தது.

இப்போட்டியில் 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்டு விளையாடின. இந்த T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 2-வது முறையாக சாம்பியன் பட்டம் இங்கிலாந்து வென்றுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி -

டி20 ஃபார்மெட்டில் நடத்தப்பட்டு வரும் பிரான்சைஸ் லீக் தொடராக ஐபிஎல் இந்திய மட்டுமல்லாது உலகம் முழுவதும் இதற்கான ரசிகர்கள் ஏராளம்.

இந்நிலையில், வரும் 2023ம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 23-ம் தேதி கொச்சியில் நடக்க உள்ளது. இதில், 10 அணிகளும் தக்க வைத்துள்ள மற்றும் ரிலீஸ் செய்யவுள்ள வீரர்களின் பெயர்களை இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளது.    

ipl-cricket-sport