ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரிலிருந்து பேட் கம்மின்ஸ் விலகல் - ஷாக்கான ரசிகர்கள்..!

Cricket TATA IPL
By Nandhini Nov 15, 2022 08:04 AM GMT
Report

 16-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரிலிருந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ் விலகியுள்ளார்.

16-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் -

அடுத்த ஆண்டு (2023) ஏப்ரலில் 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி (2023) தொடர் நடைபெற உள்ளது. இந்த கிரிக்கெட் தொடர் இரண்டறை மாதங்கள் நடக்க உள்ளது.

இந்த போட்டிக்கான வீரர்களை அணிகள் தக்கவைத்து கொள்ள இன்று (15-ந் தேதி) கடைசி நாளாகும். அடுத்த சீசனுக்கான வீரர்கள் மினி ஏலம் கொச்சியில் அடுத்த மாதம் (டிசம்பர்) 23-ம் தேதி நடக்கிறது.

ipl-cricket-pat-cummins

பேட் கம்மின்ஸ் விலகல்

இந்நிலையில், கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் இடம் பிடித்திருந்தார்.

ஆனால், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரிலிருந்து இவர் விலகுவதாக டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பதிவை டுவிட்டர் பக்கதில் வெளியிட்டுள்ளார். அதில், அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் கடினமான முடிவை எடுத்துள்ளேன். அடுத்த ஒரு வருடத்திற்கு சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் அணி வகுத்து இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளேன். ஆஷஸ் தொடர் மற்றும் உலகக்கோப்பை தொடர்ருக்கு முன் சிறிது ஓய்வு எடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

பேட் கம்மின்ஸ் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விலகியுள்ளதால் அவரது ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.