ஐபிஎல் மினி ஏலம் - ரூ. 2 கோடி விலையில் ஒரு இந்திய வீரர் பெயர் கூட இடம் பெறவில்லை - ரசிகர்கள் சோகம்...!

Cricket IPL 2023
By Nandhini Dec 02, 2022 05:56 AM GMT
Report

ஐபிஎல் மினி ஏலத்தில் ரூ. 2 கோடி அடிப்படை விலையில் ஒரு இந்திய வீரர் பெயர் கூட இடம் பெறாததால் ரசிகர்களிடையே சோகத்தை வரவழைத்துள்ளது.

T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -

ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வந்த 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 13ம் தேதி நிறைவடைந்தது. இப்போட்டியில் 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்டு விளையாடின. இந்த T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 2-வது முறையாக சாம்பியன் பட்டம் இங்கிலாந்து வென்றுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி -

டி20 ஃபார்மெட்டில் நடத்தப்பட்டு வரும் பிரான்சைஸ் லீக் தொடராக ஐபிஎல் இந்திய மட்டுமல்லாது உலகம் முழுவதும் இதற்கான ரசிகர்கள் ஏராளம்.

இந்நிலையில், வரும் 2023ம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 23-ம் தேதி கொச்சியில் நடைபெறுகிறது. இதில், 10 அணிகளும் தக்க வைத்துள்ள மற்றும் ரிலீஸ் செய்யவுள்ள வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட உள்ளது.

ipl-cricket-mini-auction-of-ipl-2023

ஒரு இந்திய வீரர் பெயர் கூட இடம்பெறவில்லை

இந்நிலையில், மொத்தமாக 991 பேர் ஐபிஎல் மினி இடத்தில் பங்கேற்க தங்களுடைய பெயரை பதிவு செய்துள்ளனர். அவர்களில் 741 பேர் இந்தியர்கள். 14 வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல்லில் பங்கு பெற பதிவு செய்துள்ளனர். அதில் ஆஸ்திரேலியாவிலிருந்து அதிகபட்சமாக 57 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், பதிவு செய்த வீரர்களின் அடிப்படை விலை ரூ. 2 கோடி, ரூ. 1.50 கோடி, ரூ. 1 கோடி , ரூ. 75 லட்சம், ரூ. 50 லட்சம் என பட்டியல் நீடிக்கிறது.

இந்த ஏலத்தில் ரூ. 2 கோடி அடிப்படை விலையில் 21 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்திரக்கின்றனர். ஆனால் அதில் ஒரு இந்திய வீரர் பெயர் கூட இடம் பெறவில்லை என்பது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை வரவழைத்துள்ளது.