ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு

cricket ipl kolkata hyderabad
By Kanagasooriyam Apr 11, 2021 05:40 PM GMT
Report

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பந்து வீசுகிறது. 14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றிரவு நடக்கும் 3-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் ஐதராபாத்- கொல்கத்தா அணிகள் மல்லுகட்டுகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.