IPL 2024: நட்சத்திர ஆல்-ரவுண்டரை அணியிலிருந்து விடுவிக்கும் CSK - வெளியான தகவல்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து இங்கிலாந்தின் நட்சத்திர ஆல்- ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை விடுவிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் துபாயில் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது.
எனவே , வரும் 26ம் தேதிக்குள் அணியிலிருந்து விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகம் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐபிஎல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து இங்கிலாந்தின் நட்சத்திர ஆல்- ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை விடுவிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விடுவிக்கும் வீரர்
கடந்த முறை சென்னை நிர்வாகம் ரூ.16.25 கோடி என்ற இமாலய தொகையில் ஸ்டோக்ஸை வாங்கியது. ஆனால் தொடரின் ஆரம்பத்திலேயே ஆஷஸ் தொடருக்காக ஐபிஎல் முழுவதுமாக விளையாட மாட்டேன் என்று அறிவித்த ஸ்டோக்ஸ் முழங்கால் காயத்தால் ஓரிரு போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.
இது பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. கால்முட்டி பிரச்சினையால் அவதிப்படும் 32 வயதான பென் ஸ்டோக்ஸ், காயத்துக்கு விரைவில் அறுவை சிகிச்சை செய்ய உள்ளார். எனவே, அடுத்த 2, 3 மாதங்களுக்கு அவர் விளையாட மாட்டார் என்பதால் 2024 சீசனிலும் விளையாடுவது சந்தேகம். இதன் காரணமாக பென் ஸ்டோக்ஸை விடுவிக்க சென்னை அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.