களை கட்டிய ஐ.பி.எல் ஏலம் : பெரிய தொகைக்கு தக்கவைக்கப்பட்ட ஒரே ஒரு தமிழக வீரர் , யார் தெரியுமா?

cricket ipl2021 ipl auction
By Irumporai Dec 01, 2021 08:30 AM GMT
Report

ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலத்துக்கு முன்பு தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை ஐபிஎல் அணிகள் நேற்று வெளியிட்டன. இதில் ஒரே ஒரு தமிழக வீரர் மட்டுமே இடம்பெற்றுள்ளார்.

சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தியை ரூ. 8 கோடிக்குத் தக்கவைத்துள்ளது கொல்கத்தா அணி. இதர தமிழக வீரர்கள் தக்கவைக்கப்படவில்லை. இந்திய டி20 அணியில் மீண்டும் இடம்பெற்றுள்ள ஆர். அஸ்வினை தில்லி அணியால் தக்கவைக்க முடியாமல் போனது.

இதனால் இரு புதிய ஐபிஎல் அணிகளில் ஏதாவது ஒன்று அஸ்வினைத் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்து தமிழக அணிக்கு சையத் முஷ்டாக் அலி கோப்பையைப் பெற்றுத் தந்த ஷாருக் கானையும் இரு புதிய அணிகள் தேர்வு செய்ய ஆர்வம் காட்டும் எனக் கருதப்படுகிறது.

சையத் முஷ்டாக் அலி கோப்பையைத் தமிழக அணி வென்று சாம்பியன் ஆகியுள்ளதால் மெகா ஏலத்தில் ஆர். அஸ்வின், தினேஷ் கார்த்திக், ஷாருக் கான், சாய் கிஷோர், நடராஜன், எம். அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் போன்ற தமிழக வீரர்கள் பெரிய தொகைக்குத் தேர்வாக வாய்ப்புள்ளது.