ஐபிஎல் மெகா ஏலம் 2022 - ஏலம் எடுக்கப்படாத வீரர்களின் பட்டியல் LIVE

bangalore ipl2022 iplauction2022 unsoldplayers
By Swetha Subash Feb 12, 2022 08:30 AM GMT
Report

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2022-ம் ஆண்டுக்கான மெகா ஏலம் இன்று தொடங்கியது.

பெங்களூருவில் இன்றும் நாளையும் நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் 370 இந்திய வீரர்கள் மற்றும் 220 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 590 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

15-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவில் தொடங்குகிறது. இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் புதிதாக இணைந்துள்ளன. 

இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. அவருக்கு அடிப்படை தொகையாக 2 கோடி நிர்ணயிக்கப்பட்டது.

அதேபோல், ராஜஸ்தான் அணியில் விளையாடிய ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை.

தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் மற்றும் பங்களாதேஷ் ஆல் ரவுண்டர் ஷாஹிப் அல் ஹசனையும் எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை.

ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி மற்றும் ஆஸ்திரேலியா வீரர் மேத்யூ வேடை ஏலம் எடுக்க எந்த அணி நிர்வாகமும் முன் வரவில்லை.

இந்திய வீரர் ரித்திமான் சாஹா மற்றும் இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை.

டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த உமேஷ் யாதவை இந்த முறை எந்த அணியும் ஏலம் எடுக்க முன்வரவில்லை.

தென்னாப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிரை எடுக்க எந்த அணி நிர்வாகமும் முன் வரவில்லை.

இங்கிலாந்து வீரர் அடில் ரஷித் மற்றும் ஆஃப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் சத்ரானை ஏலம் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை.

ஆஸ்திரேலிய வீரர் ஆடம் சம்பா மற்றும் இந்திய வீரர் அமித் மிஷ்ராவை வாங்கவும் யாரும் முன்வரவில்லை.