ஐபிஎல் 2-வது நாள் ஏலம் தொடங்கியது : ஏலத்தில் எடுக்கப்பட்டு வரும் வீரர்களின் பட்டியல் LIVE

bangalore ipl2022 iplauction2022 playerslist auction2ndday
By Swetha Subash Feb 13, 2022 07:14 AM GMT
Report

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் 2வது நாள் ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று தொடங்கிய நிலையில், இன்று 2-வது நாள் ஏலம் தொடங்கியுள்ளது.

நேற்று நடைபெற்ற ஏலத்தில் எதிர்பார்க்கப்பட்டது போலவே இந்திய இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன், வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர்,

மிடில் வரிசை பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர், ஆல்-ரவுண்டர் ஷா்துல் தாக்குர் ஆகியோருக்கு கடும் போட்டி நிலவியது.

தீபக் சாஹரைத் தக்கவைத்துக் கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.14 கோடி வழங்கியது.

எனினும், அதை பின்னுக்குத் தள்ளி மும்பை இந்தியன்ஸ் அணி இஷான் கிஷனை ரூ.15.25 கோடி கொடுத்து வாங்கியது.

இந்நிலையில், இன்றைய தினத்தின் முதல் வீரராக தென்னாப்பிரிக்கா அணி வீரர் ஏய்டன் மார்க்ரமை 2.60 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வாங்கியது.

மந்தீப் சிங்கை 1.10 கோடிக்கு வாங்கியது டெல்லி கேபிடல்ஸ்.

அஜிங்கியா ரஹானேவை அடிப்படை விலையான 1 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

இங்கிலாந்து ஆல்-ரவுண்டரான லியம் லிவிங்ஸ்டனை ரூ.11.50 கோடிக்கு வாங்கியது பஞ்சாப் கிங்ஸ் அணி.

வெஸ்ட் இண்டீஸ் வீரர் டொமினிக் டிரேக்ஸை ரூ.1.10 கோடிக்கு வாங்கியது குஜராத் டைட்டன்ஸ் அணி.

இந்திய வீரர் விஜய் சங்கரை 1.40 கோடிக்கு வாங்கியது குஜராத் டைடன்ஸ்.

இந்திய வீரர் ஜெயந்த் யாதவை 1.70 கோடிக்கு வாங்கியது குஜராத் டைடன்ஸ்.

மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த வீரர் டொமினிக் ட்ரேக்ஸை 1.10 கோடிக்கு வாங்கியது குஜராத் டைடன்ஸ்.

மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ஒடேன் ஸ்மித்தை 6 கோடிக்கு வாங்கியது பஞ்சாப் கிங்ஸ் அணி.

தென்னாப்பிரிக்கா அணி வீரர் மார்கோ ஜேன்சனை 4.20 கோடிக்கு வாங்கியது சன்ரைசர்ஸ் அணி.

இந்திய வீரர் கெளதமை 90 லட்சத்துக்கு வாங்கியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.

இந்திய வீரர் ஷிவம் துபேவை 4 கோடிக்கு வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

இந்திய வீரர் மனன் வோராவை, 20 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்.

இந்திய வீரர் ரின்கு சிங்கை, 55 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

இலங்கை வீரர் மகேஷ் தீக்ஷனாவை 70 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது.

இந்திய வீரர் ஜெய்தேவ் உனத்கண்டை1.30 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது.

இந்திய வீரர் நவ்தீப் சைனியை 2.60 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது.

இந்திய வீரர் சந்தீப் சர்மாவை 50 லட்சத்துக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது.

இந்திய வீரர் சேட்டன் சகாரியாவை 4.20 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி வாங்கியது.

இலங்கை வீரர் துஷ்மந்த சமீராவை 2 கோடிக்கு வாங்கியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்.

இந்திய இளம் வீரர் சையத் கலீல் அகமதுவை 5.25 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி வாங்கியது

இந்திய வீரர் லலித் யாதவை 65 லட்சத்திற்கு வாங்கியது டெல்லி கேபிடல்ஸ் அணி.

இந்திய வீரர் ரிபால் படேலை 20 லட்சத்திற்கு வாங்கியது டெல்லி கேபிடல்ஸ் அணி.

U19 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் யாஷ் துல் 50 லட்சத்துக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி வாங்கியது.

இந்திய வீரர் திலக் வர்மாவை 1.70 கோடிக்கு வாங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி.

இந்திய கிரிக்கெட் வீரர் மஹிபால் லோம்ரோரை 95 லட்சத்துக்கு வாங்கியது ஆர்.சி.பி அணி.

இந்திய கிரிக்கெட் வீரர் அனுகுல் ராயை 20 லட்சத்துக்கு வாங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

இந்திய கிரிக்கெட் வீரர் தர்ஷன் நல்கண்டே வை 20 லட்சத்துக்கு வாங்கியது குஜராத் டைடன்ஸ்.

இந்திய வீரர் சஞ்சய் யாதவை 50 லட்சத்துக்கு வாங்கியது மும்பை இந்தியன்ஸ்.

இந்திய வீரர் சிமர்ஜீத் சிங்கை 20 லட்சத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது.

இந்திய வீரர் யாஷ் தயாலை 2 கோடிக்கு வாங்கியது குஜராத் டைட்டன்ஸ் அணி.

இந்திய வீரர் ராஜ்வர்தனை 1.5 கோடிக்கு வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

இந்திய வீரர் ராஜ் அங்கத் பாவாவை 2 கோடிக்கு வாங்கியது பஞ்சாப் கிங்ஸ் அணி.

நியூசிலாந்து வீரர் ஃபின் ஆலனை 80 லட்சத்துக்கு வாங்கியது RCB அணி.

டேவோன் கான்வேவை 1 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது.

மேற்கிந்திய தீவுகள் வீரர் ரோவ்மேன் பாவெலை 2.80 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி வாங்கியது.

இங்கிலாந்து வீரர் ஜோப்ரா ஆர்சரை 8 கோடிக்கு வாங்கியது மும்பை இந்தியன்ஸ்.

இந்திய வீரர் ரிஷி தவானை 55 லட்சத்துக்கு வாங்கியது பஞ்சாப் கிங்ஸ் அணி.

டுவைன் பிரிடோரியஸை 50 லட்சத்துக்கு வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

ஷெர்ஃபேன் ரூதர்போர்டை 1 கோடிக்கு வாங்கியது பெங்களூரு அணி.

ஆஸ்திரேலிய வீரர் டேனியல் சாம்ஸை 2.6 கோடிக்கு வாங்கியது மும்பை அணி.

நியூசிலாந்து வீரர் மிட்செல் சாண்ட்னரை 1.9 கோடிக்கு வாங்கியது சென்னை அணி.

ரொமாரியோ ஷெபர்டை 7.75 கோடிக்கு வாங்கியது ஐதராபாத் அணி.

ஜேசன் பெரெண்டார்ஃபை 75 லட்சத்துக்கு வாங்கியது பெங்களூரு அணி.

ஓபட் மெக்காயை 75 லட்சத்துக்கு வாங்கியது ராஜஸ்தான் அணி.

டைமல் மில்ஸை 1.5 கோடிக்கு வாங்கியது மும்பை அணி.

ஆடம் மில்னேவை 1.9 கோடிக்கு வாங்கியது சென்னை அணி.

சுப்ரன்ஷு சேனாபதியை 20 லட்சத்துக்கு வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்.

சிங்கப்பூர் வீரர் டிம் டேவிடை 8.25 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது.

இந்திய வீரர் பிரவின் துபேவை 50 லட்சத்துக்கு வாங்கியது டெல்லி கேபிடல்ஸ்.

இந்திய வீரர் ப்ரேக் மங்கத்தை 20 லட்சத்துக்கு வாங்கியது பஞ்சாப் கிங்ஸ் அணி.

இந்திய வீரர் சுயாஷ் பிரபுதேசாய்யை 30 லட்சத்துக்கு வாங்கியது பெங்களூர் அணி.

வைபவ் அரோராவை 2 கோடிக்கு வாங்கியது பஞ்சாப் அணி.

முகேஷ் சவுத்ரியை 20 லட்சத்துக்கு வாங்கியது சென்னை அணி.

ரஷிக் தாரை 20 லட்சத்துக்கு வாங்கியது கொல்கத்தா அணி.

சாமா மிலைண்ட்டை 25 லட்சத்துக்கு வாங்கியது பெங்களூரு அணி.

பிரசாந்த் சொலான்கியை 1.2 கோடிக்கு வாங்கியது சென்னை அணி.

ஆஸ்திரேலிய வீரர் ஷான் அப்பாட்டை 2.4 கோடிக்கு வாங்கியது ஐதராபாத் அணி.

மேற்கிந்திய தீவுகள் வீரர் அல்ஜரி ஜோசஃபை 2.4 கோடிக்கு வாங்கியது குஜராத் டைட்டன்ஸ்.

ஆஸ்திரேலியா வீரர் ரிலி மெரிடித்தை 1 கோடிக்கு வாங்கியது மும்பை அணி.

ஆயுஷ் பதோனியை 20 லட்சத்துக்கு வாங்கியது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்.

அனீஷ்வர் கௌதமை 20 லட்சத்துக்கு வாங்கியது பெங்களூரு அணி.

பாபா இந்திரஜித்தை 20 லட்சத்துக்கு வாங்கியது கொல்கத்தா அணி.

இலங்கை வீரர் சமிகா கருனாரத்னேவை 20 லட்சத்துக்கு வாங்கியது கொல்கத்தா அணி.

ஆர் சமர்த்தை 20 லட்சத்துக்கு வாங்கியது ஐதராபாத் அணி.

பிரதீப் சங்வானை 20 லட்சத்துக்கு வாங்கியது குஜராத் டைட்டன்ஸ்.

ரித்திக் சட்டர்ஜியை 20 லட்சத்துக்கு வாங்கியது பஞ்சாப் அணி.