IPL Auction - வீரர்களை தட்டித்துாக்கிய அணிகள்

ipl2022 iplauction2022 playersfulllist
By Swetha Subash Feb 12, 2022 02:06 PM GMT
Report

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2022-ம் ஆண்டுக்கான மெகா ஏலம் தொடங்கியது.

பெங்களூருவில் இன்றும் நாளையும் நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் 370 இந்திய வீரர்கள் மற்றும் 220 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 590 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

15-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவில் தொடங்குகிறது.

இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் புதிதாக இணைந்துள்ளன.

இந்நிலையில், இன்று தொடங்கப்பட்ட ஏலத்தில் முதல் வீரராக ஷிகர் தவான் 2 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்ட நிலையில் அவரை 8.25 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்துள்ளது.

தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை 5 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் அணியும் தென்னாப்பிரிக்க வீரர் ரபாடாவை 9.25 கோடிக்கு பஞ்சாப் அணியும் ஏலம் எடுத்தது.

டிரெண்ட் போல்டை ரூ.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.மேலும் ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸை 7.25 கோடிக்கும், இந்திய வீரர் ஸ்ரேயஸ் ஐயரை 12.25 கோடிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்தாண்டு ஐபிஎல் போட்டியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி, இந்திய வீரர் முகமது ஷமியை 6.25 கோடிக்கு வாங்கியுள்ளது.

மேலும், சிஎஸ்கே அணி வீரராக இருந்த ஃபாஃப் டு பிளெச்சிஸை இந்த முறை 7 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது.

மும்பை அணியில் விளையாடிய குவிண்டன் டி காக்கை 6.75 கோடி ரூபாய்க்கு புதிதாக சேர்க்கப்பட்டுள்ள லக்னோ சூப்பர் ஜைண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

மேலும், ஹைதரபாத் அணியில் விளையாடி வந்த டேவிட் வார்னரை 6.25 கோடிக்கு டெல்லி கேபிட்டல்ஸ் அணி வாங்கியது. சன் ரைசஸ் ஹைதராபாத் அணியில் விளையாடிய மணிஷ் பாண்டேவை ரூ.4.6 கோடிக்கு ஏலம் எடுத்தது லக்னோ அணி.

டெல்லி கேபிட்டல் அணியில் விளையாடிய ஷிம்ரன் ஹெட்மையரை ரூ.8.5 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல் ஜேசன் ராயை ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்தது குஜராத் அணி.

இளம் வீரர் தேவ்தத் படிக்கல்லை ரூ.7.75 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல் அணி. வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த ப்ராவோவை ரூ.4.49 கோடிக்கு ஏலம் எடுத்தது சிஎஸ்கே அணி.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடிய ஜேசன் ஹோல்டரை ரூ.8.75 கோடிக்கு ஏலம் எடுத்தது லக்னோ அணி. ராபின் உத்தப்பாவை 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை அணி.

ஹர்சல் பட்டேலை ரூ. 10.75 கோடிக்கு ஏலம் எடுத்தது ஆர்சிபி அணி. தீபக் ஹுடாவை ரூ. 5.75 கோடிக்கு ஏலம் எடுத்தது லக்னோ அணி. இலங்கை வீரர் வானிந்து ஹசரங்காவை 10.75 கோடிக்கு ஏலம் எடுத்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

பெங்களூரு அணியில் விளையாடி வந்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை 8.75 கோடி கொடுத்து வாங்கியது சன் ரைசர்ஸ் ஹைதராபாத்.

க்ருனால் பாண்டியாவை 8.25 கோடிக்கு ஏலம் எடுத்தது லக்னோ அணி. ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷை 6.50 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ்.

அம்பத்தி ராயுடுவை 6.75 கோடிக்கு ஏலம் எடுத்து மீண்டும் அணியில் தக்கவைத்தது சிஎஸ்கே அணி. இஷான் கிஷனை 15.25 கோடிக்கு தக்கவைத்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவை 6.75 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது. தினேஷ் கார்திக்கை 5.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பெங்களூரு அணி.

மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் நிக்கோலஸ் பூரனை 10.75 கோடிக்கும், தமிழக வீரர் நடராஜனை 4 கோடி ரூபாய்க்கும் ஏலம் எடுத்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. தீபக் சஹரை 14 கோடிக்கு மீண்டும் அணியில் தக்கவைத்தது சிஎஸ்கே நிர்வாகம்.

பிரசித் கிருஷ்ணாவை 10 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. நியூசிலாந்து வீரர் லாக்கி பெர்குசனை 10 கோடிக்கு ஏலம் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ்.

ஆஸ்திரேலிய அணி வீரர் ஜோஸ் ஹேசல்வுட்டை 7.75 கோடிக்கு ஏலம் எடுத்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இங்கிலாந்து வீரர் மார்க் வுட்டை 7.5 கோடிக்கு ஏலம் எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்.

இந்திய அணி வீரர் புவனேஷ்வர் குமாரை 4.2 கோடிக்கு ஏலம் எடுத்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. ஷர்துல் தாக்கூரை 10.75 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ்.

வங்கதேச அணி வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை 2 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ் அணி. குல்தீப் யாதவை 2 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.

ராகுல் சாஹரை 5.25 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. யஸ்வேந்திர சாஹலை 6.50 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.