IPL ஏலத்தில் ஏகபோக விலைக்கு போன வீரர்கள் பட்டியல்

Swetha Subash
in கிரிக்கெட்Report this article
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2022-ம் ஆண்டுக்கான மெகா ஏலம் தொடங்கியது.
பெங்களூருவில் இன்றும் நாளையும் நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் 370 இந்திய வீரர்கள் மற்றும் 220 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 590 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
15-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவில் தொடங்குகிறது.
இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் புதிதாக இணைந்துள்ளன.
இந்நிலையில், இன்று தொடங்கப்பட்ட ஏலத்தில் முதல் வீரராக ஷிகர் தவான் 2 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்ட நிலையில் அவரை 8.25 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை 5 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் அணியும் தென்னாப்பிரிக்க வீரர் ரபாடாவை 9.25 கோடிக்கு பஞ்சாப் அணியும் ஏலம் எடுத்தது.
டிரெண்ட் போல்டை ரூ.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.