ஐபிஎல் 2025: இந்த 4 அணிகள் தான் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் - சிஎஸ்கே வீரர் கணிப்பு!
பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் அணிகள் குறித்து முன்னாள் சிஎஸ்கே வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.
பிளே ஆப்
ஐபிஎல் 18ஆவது சீசன், மார்ச் 22ஆம் தேதி முதல் துவங்கவுள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
தொடர்ந்து மார்ச் 22ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் சேப்பாக்கத்தில் மோதவுள்ளன. இதில், ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும். நான்கு அணிகளால் மட்டுமே முடியும்.
முன்னாள் வீரர் கணிப்பு
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சதாப் ஜகாத்தி, என்னை பொருத்தவரை, கொல்கத்தா அணி கண்டிப்பாக பிளே ஆப் சுற்றுக்கு சென்று விடும். இதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலம் வாய்ந்த அணியாக இருக்கிறது.
மேலும் குஜராத் அணியும் நல்ல பலமான அணியாக தெரிகிறது. இதன் மூலம் கொல்கத்தா, சென்னை குஜராத் ஆகிய அணிகள் முதல் மூன்று இடங்களை பிடித்து விடும். நான்காவது அணியாக லக்னோ அல்லது டெல்லி இருக்கும் என நினைக்கின்றேன். ஆர்சிபி அணி இம்முறை நன்றாக செயல்படும் என நினைக்கின்றேன்.
கோலி பல ஆண்டுகளாக ஆர்சிபி அணிக்கு விளையாடி இருக்கிறார். அவர் கோப்பையுடன் செல்ல வேண்டும் என ஆசைப்படுகிறேன். இம்முறை விராட் கோலி தான் ஆரஞ்சு தொப்பியை வெல்வார். இல்லையென்றால் ரோகித் சர்மா வெல்ல வாய்ப்பு இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.