IPL போட்டிக்காக பயிற்சியில் இறங்கி பட்டைய கிளப்பும் தோனி - வைரலாகும் வீடியோ..!

MS Dhoni Cricket Viral Video IPL 2023
By Nandhini Feb 01, 2023 07:31 AM GMT
Report

IPL போட்டிக்காக பயிற்சியில் இறங்கி பட்டைய கிளப்பும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பயிற்சியில் இறங்கி பட்டைய கிளப்பும் தோனி

ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. ஐபிஎல்லின் 16வது சீசன் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. இதுவரை 4 முறை கோப்பையை வென்ற சிஎஸ்கே அணி, 5வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி களமிறங்க இருக்கிறது. இந்நிலையில், 41 வயதாகும் தோனி, ஐபிஎல் 16வது சீசனுக்கான வலைப்பயிற்சியை மற்ற அனைத்து வீரர்களுக்கு முன்பாகவே தொடங்கிவிட்டார்.

ஐபிஎல்லில் மட்டும் ஆடிவரும் தோனிக்கு வேறு போட்டிகளில் ஆடும் பயிற்சி கிடையாது. இதனால், முன்கூட்டியே தனது வலைப்பயிற்சியை அவர் தொடங்கியுள்ளார்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.  

ipl-2023-ms-dhoni-practice-viral-video