தினேஷ் கார்த்திக் இதை கண்டிப்பாக பண்ணிருக்கனும் - டூ பிளஸி வருத்தம்!
தினேஷ் கார்த்திக் இதனை செய்திருக்க வேண்டும் என பாப் டூ பிளஸி வருத்தம் தெரிவித்துள்ளார்.
CSK vs RCB
ஐபிஎல் 16ஆவது சீசனின் 24ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதில், சிஎஸ்கே 20 ஓவர்கள் முடிவில் 226/6 ரன்களை குவித்து அசத்தியது. இறுதியில் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 218/8 ரன்களை மட்டும் சேர்த்து, 8 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
டூ பிளஸி வருத்தம்
போட்டிக்கு பின் பேசிய டூ பிளஸி, ''இப்போட்டியில் நாங்கள் சிறப்பாகத்தான் செயல்பட்டோம். கடைசி 5 ஓவர்களில் மேட்சை முடிப்பற்கு சரியான திட்டத்தோடுதான் இருந்தோம். தினேஷ் கார்த்திக் ஒரு பினிஷர். அவர் முடித்துகொடுப்பார் என நினைத்தோம். அப்படி நடக்கவில்லை.
பந்துவீச்சில் கடைசி நேரத்தில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. சிராஜ் மிகச்சிறப்பாக பந்துவீசினார். நான் கடைசிவரை விளையாடி போட்டியை முடித்துக்கொடுக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், அப்படி செய்ய முடியவில்லை.
இடுப்பு பகுதியில் சிறுது தசைபிடிப்பு இருந்தது. ஆகையால், என்னால் கவனத்தோடு விளையாட முடியவில்லை'' எனக் கூறினார்.