தோனி மாஸ்டர் பிளான்: CSKவில் மீண்டும் ஜடேஜா - இந்த 3 வீரர்களும்..!
சிஎஸ்கே அணியில் ஜடேஜா நீடித்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஜடேஜா
கடந்த ஒரு வருடமாக சென்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்துக்கும், ஜடேஜாவிற்கும் இடையேயான உறவு சுமூகமாக இல்லாமல் கருத்து வேறுபாடு நீடித்து வந்தது. கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகிய நிலையில், ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
ஆனால், அவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்விகளை சந்தித்தது. ஐபிஎல் 2022 தொடர் முடிவடைந்ததும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்பான அத்தனை புகைப்படங்களையும் நீக்கிவிட்டார்.
3 வீரர்கள்
அப்போது முதல் ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகலாம் என்ற தகவல் வெளியானது. இந்நிலையில், தோனி ஜடேஜாவிடம் பேசியுள்ளார். மேலும், சிஎஸ்கே நிர்வாகமும் சம்மதித்துள்ளது.
தொடர்ந்து தோனிக்கு தலைவணங்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் ஜடேஜா. அதனையடுத்து, ஐபிஎல் 2023-ல் தோனி சென்னை அணிக்கு கேப்டனாக செயல்பட உள்ளார். இதில் சிஎஸ்கே 3 வீரர்களைக் குறி வைத்துள்ளது.
சாம் கர்ரன் ஐபிஎல் 2020 மற்றும் 2021-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். புவனேஷ்வர் குமார், ஐபிஎல் தொடரில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர். லிட்டன் தாஸ், இவருக்கு ஐபிஎல்லில் அதிக தேவை உள்ளது. டி20 கோப்பையில் இந்திய அணிக்கு எதிரான இவரது ஆட்டம் அனைவரையும் கவர்ந்தது.