ஐபிஎல் 2023 - வியர்வை சொட்ட சொட்ட தீவிர பயிற்சியில் சென்னை அணி வீரர்கள்...- வைரல் வீடியோ...!
ஐபிஎல் 2023 போட்டியில் பங்கேற்க உள்ள சென்னை அணி வீரர்கள் வியர்வை சொட்ட சொட்ட தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஐபிஎல் 2023 போட்டி -
10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் வரும் 31-ம் தேதி முதல் மே 28-ம் தேதி வரை நடக்க உள்ளது. ஐபிஎல் 2023 தொடரின் முதல் போட்டி மார்ச் 31ம் தேதி அகமதாபாத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன.
சென்னை வந்தடைந்தார் தோனி
நடைபெற உள்ள ஐபிஎல் தொடரின் பயிற்சிக்காக நேற்று சென்னை வந்தடைந்தார் தோனி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
தீவிர பயிற்சியில் வீரர்கள்
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஐபிஎல் போட்டிக்காக சென்னைக்கு வந்துள்ள தோனி, ரஹானே , ஷிவம் துபே, அம்பத்தி ராயுடு உள்ளிட்ட இதர சென்னை அணி வீரர்கள் தங்கள் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Giving whatever it takes! ??#WhistlePodu #Yellove ?? pic.twitter.com/p5nEfymQUL
— Chennai Super Kings (@ChennaiIPL) March 6, 2023