எனக்கு அரசியல் வேண்டாம் , ஒரு நல்ல சமையல்காரனா இருக்கப்போறேன் - சுரேஷ் ரெய்னா

sureshraina ipl2022 iplauction2022
By Irumporai Feb 16, 2022 04:49 AM GMT
Report

 நல்ல சமையல்காரனாக விரும்புவதாக ‘மிஸ்டர் ஐபிஎல்’ சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் மெகா ஏலம் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த முறை ரெய்னாவை சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்தில் எடுக்கவில்லை இந்த நிலையில் ஐபிஎல் 2022 ஏலத்தில் விற்கப்படாத நிலையில் சுரேஷ் ரெய்னா கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் நம்மிடம் என்ன திறமை உங்களது என்பது நமக்கு நன்றாகவே தெரியும், கிரிக்கெட் நாம் மிகவும் காதலிக்கிறேன். எனக்கு அரசியல் தெரியாது. நான் ஒரு நலல சமையம்காரனாக ஆக விரும்புகிறேன். எனக்கு மிக நன்றாக சமைக்கத் தெரியும் என்றார்.

எனக்கு அரசியல் வேண்டாம் ,  ஒரு நல்ல சமையல்காரனா இருக்கப்போறேன்  - சுரேஷ் ரெய்னா | Ipl 2022 Suresh Raina Wants To Become A Good Chef

மேலும், கிரிக்கெட் எனது ஒரே காதல். மேலும் நான் கிரிக்கெட்டில் உறுதியாக இருப்பேன். எனக்கு தெரிந்த விளையாட்டு மற்றும் அரசியல் எனக்கு அதிகம் புரியவில்லை. நான் இப்போது ஒரு நல்ல சமையல்காரராக மாற விரும்புகிறேன்.

ஒவ்வொரு சமையலையும் நன்றாக சமைத்து, ஒவ்வொரு இடத்துக்கும் சென்று பார்க்க விரும்புகிறேன்,” என்று சுரேஷ் ரெய்னா கூறினார். மிஸ்டர் ஐபிஎல் என பெயரெடுத்தவர் சுரேஷ் ரெய்னா.

ஐபிஎல் போட்டி வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாட வீரர்கள் பட்டியலில் டாப் 3-ல் இருக்கும் இவரை இந்த ஆண்டு எந்த ஐபிஎல் அணியும் ஏலம் எடுக்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது