தப்பு பண்ணிட்டீங்களே… காரணமே இல்லாம இப்படி கழட்டி விட்டீங்களோ..!சோகத்தில் SRH ரசிகர்கள்

அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மெகா ஏலம் நடத்தப்பட உள்ளதால், ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை (அதிகபட்சம் 4 வீரர்கள்) தக்க வைத்து கொண்டு மற்றவர்களை விடுவிக்க வேண்டிய காட்டாயத்தை சந்தித்தது.

வேறு வழியில்லாததால் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை வைத்து கொண்டு மற்றவர்களை விடுவித்தது.

இதில் வெங்கடேஷ் ஐயர், ரிஷப் பண்ட், ருத்துராஜ் கெய்க்வாட், முகமது சிராஜ் போன்ற இளம் வீரர்கள் பலர் நல்ல விலைக்கு தங்களது அணிகளால் தக்க வைக்கப்பட்டிருந்தாலும்,

ஐபிஎல் வரலாற்றின் ஜாம்பவான்களாக திகழ்ந்து வரும் ரசீத் கான், டேவிட் வார்னர், சுரேஷ் ரெய்னா, டூபிளசிஸ், பிராவோ, ஹர்திக் பாண்டியா, குவின்டன் டிகாக் போன்ற சீனியர் வீரர்கள் பலர் தங்களது அணிகளில் இருந்து கழட்டிவிடப்பட்டனர்.

இந்நிலையில் சர்வதேச போட்டிகளில் மட்டும் இல்லாமல் ஐபிஎல் போட்டிகளிலும் மிகச்சிறந்த விளையாடிய வீரர்களை ஒரு சில அணி தக்க வைக்காமல் கழட்டி விட்டது. அப்படி திறமை இருந்தும் கழட்டி விடப்பட்ட 3 வீரர்களைப் பற்றி இங்கு காண்போம்.

ஜானி பேர்ஸ்டோ இங்கிலாந்து அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ கடந்த 3 ஆண்டுகளாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக மிக சிறந்த முறையில் பங்காற்றி பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

இருந்தபோதும் இவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது அணியில் தக்கவைக்காமல் நீக்கிவிட்டது. இவரை எந்த அணி தேர்ந்தெடுக்கிறதோ அந்த அணிக்கு நிச்சயம் ஜானி பேர்ஸ்டோ மிகப் பெரும் உதவியாக திகழ்வார் என்பதற்காக வருகிற 2022 ஐபிஎல் தொடர் ஏலத்தில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்