Wednesday, Jul 9, 2025

‘’ இந்த ரணகளத்திலும் பார்த்தீங்களா ‘’ : ஐ.பி.எல் களத்தில் ஒரு முத்தக்காட்சி

ipl2022 IPLMatch Kissing ViralPicture
By Irumporai 3 years ago
Report

ஐபிஎல் தொடரில் நேற்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்ன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குஜராத் டைட்ன்ஸ் அணி டெல்லி அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் டெல்லி அணியின் பேட்டிங்கின்போது ஒரு சம்பவம் களத்திற்கு வெளியே நடந்தது. அது தொடர்பான படம் ஒன்று தற்போது வேகமாக வைரலாகி வருகிறது. அதன்படி டெல்லி அணியின் பேட்டிங்கின் போது ஆட்டத்தின் 4ஆவது ஓவரின் முடிவில் டிவியில் கேமராமேன் ஒரு காட்சியை காட்டினார்.

அதில் மைதானத்தில் அமர்ந்து கொண்டிருந்த ரசிகர்கள் இருவர் முத்தமிட்டு கொள்ளும் காட்சி இடம்பெற்று இருந்தது. இந்தப் படத்தை சமூகவலைதளங்களில் பதிவிட்ட ரசிகர்கள் மீம்ஸ்களை அள்ளி தெளித்து வருகின்றனர்.

குறிப்பாக சிங்கிள் பலரையும் இந்தப் படம் அதிகமாக தாக்கும் வகையில் அமைந்துள்ளது. இதன்காரணமாக அவர்கள் தங்கள் பங்கிற்கு மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.