ஐபிஎல் தொடங்கும் தேதி அறிவிப்பு - இந்த முறை போட்டிகளில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றம்

chennaisuperkings ipl2022 IPl
By Petchi Avudaiappan Feb 25, 2022 06:36 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

இந்தியாவில் 15வது ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்காக லக்னோ, குஜராத் ஆகிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 10 அணிகளுக்கான வீரர்களின் மெகா ஏலம் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடந்து முடிந்தது. இதில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் போட்டிப் போட்டு எடுத்தன. 

இதனிடையே 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26ஆம் தேதி தொடங்கி மே 29ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 10 அணிகள் பங்கேற்கும் நிலையில் இரண்டு குரூப்களாக பிரிக்கப்பட்டு தலா 5 அணிகள் இடம் பெற்றுள்ளன. 

அந்த வகையில் ஏ குரூப்பில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி, லக்னோ ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளது. இதேபோல் குரூப் பி பிரிவில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத், பெங்களூரு, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்களது குரூப்பில் உள்ள அணிகளுடன் 2 முறையும், எதிர் குரூப்பில் உள்ள அணிகளுடன் தலா 1 முறையும் மோத வேண்டும். 

ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரை மும்பை வான்கடே மைதானம் மற்றும் டி.ஓய். பாட்டில் மைதானத்தில் தலா 4 போட்டிகளும், பிராபோர்ன் மைதானம் மற்றும் புனே மைதானம் தலா 3 போட்டிகளும் விளையாடும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.