முக்கிய வீரர்களுக்கு இடமில்லை - ஐபிஎல் 2022 தொடர் குறித்து மும்பை அணி தீவிர ஆலோசனை

2022 ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த வீரரை தக்கவைத்துக் கொள்ளலாம் என்று பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் புதிதாக 2 அணிகள் இணைவதோடு , வீரர்களுக்கான மெகா ஏலமும் நடைபெற உள்ளது. இதனால் ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை தக்க வைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அந்த வகையில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி எந்த வீரர்களை எல்லாம் தக்கவைத்துக் கொள்ளலாம் என்று பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே அந்த அணி ரோகித் சர்மா மற்றும் பும்ரா ஆகிய இரு வீரர்களையும் தனது அணியில் தக்க வைத்து விட்டது, ஆனால் 4 வீரர்களை தக்க வைக்க வேண்டும் என்பதால் பொல்லார்ட், சூர்யகுமார் யாதவ் போன்றவர்களையும் தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஐபிஎல் தொடரில் அசைக்க முடியாத அணி என்றழைக்கப்படும் மும்பை அணியில் இடம் பெறப் போகும் வீரர்கள் யார் யார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது.  

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்