IPL 2022 : முதல் போட்டி சென்னையிலா? உற்சாகத்தில் ரசிகர்கள் !
இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு துடங்கப்பட்ட IPL தொடர்கள் வருடந்தோறும் பெரும் விமர்சையாக ரசிகர்களால் கொண்டாடப்படும் முக்கிய தொடர்களில் ஒன்றாகும்.
மற்ற நாடுகளில் ஆடப்படும் T20 லீக் தொடர்களை போல இந்தியாவிலும் தொடங்கப்பட்ட IPL போட்டியின் முக்கிய நோக்கம் இந்திய உள்ளூர் வீரர்களின் அசாத்திய திறமையை வெளியே கொண்டு வருவது தான்.
அப்படிப்பட்ட நோக்கத்துடன் துவங்கப்பட்ட இந்த தொடர் இப்பொழுது முழுக்க முழுக்க வியாபாரமாகவே மாறியிருக்கிறது.
மேலும் இந்தாண்டு IPL தொடர் கொரோனா பாதிப்பு காரணமாக ரசிகர்கள் நேரடியாக சென்று கண்டுகளிக்க முடியாத வகையில் துபயில் நடைபெற்றது.
இதனால் பெரும் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் அடுத்தாண்டு நடக்கவிருக்கும் IPL-யை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற மற்ற தொடர்கள் போல் இல்லாமல் வருகிற ஆண்டு நடக்கப்போகும் IPL தொடரில் புதிதாக இரண்டு அணிகள் பங்குபெற மொத்தம் 10 அணிகள் ஆட இருக்கின்றன என்பது மற்றோரு சுவாரஸ்ய தகவல்.
அதன்படி ஆர்பிஎஸ்ஜி நிறுவனம் 7,090 கோடி ரூபாய்க்கு லக்னோ அணியையும், சிவிசி நிறுவனம் 5625 கோடி ரூபாய்க்கு அகமதாபாத் அணியையும் எடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து மேலும் ஆர்வத்தை அதிகரிக்கும் விதமாக ஐபிஎல் 2022 வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளதாகவும், முதல்போட்டியிலேயே சென்னை அணியும், மும்பை அணியும் விளையாட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இந்த செய்தி அனைத்து IPL ரசிகர்களையும் உற்சாகமடைய செய்திருக்கிறது.