‘’ ரெட்டை கதிரே இதோ நீ நான் நாம் ‘’ சிஎஸ்கே, மும்பையை கலாய்த்து வைரலாகும் மீம்ஸ்
ஐபிஎல் தொடரையே ஒரு காலத்தில் கட்டி ஆண்ட சிஎஸ்கே, மும்பை அணிக்கு இம்முறை பரிதாபமான தொடக்கமே அமைந்துள்ளது. இதுவரை இரு அணிகளும் ஹாட்ரிக் தோல்வி அடைந்து முறையே 8வது மற்றும் 9வது இடத்தில் உள்ளது. அது எப்படி ரெண்டு பேரும் சொல்வி வைத்தது மாதிரி தோல்வி அடைகிறீர்கள் என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
எப்போதும் ஐபிஎல் தொடரில் மும்பை அணி, சென்னை அணி இரண்டுமே பலமான அணியாக தான் இருக்கும். எப்போதாவது சீசன் தொடக்கத்தில் சிஎஸ்கே ஸ்ட்ராங்காக இருந்தால் மும்பை வீக்காக இரக்கும். மும்பை ஸ்ட்ராங்காக இருந்தால், சிஎஸ்கே வீக்காக இருக்கும். முதல் முறையாக இரண்டு அணியுமே வீக்காக இருப்பது போல் சீம்ஸ் செல்ல நாய்க்குட்டியை வைத்து மீம்ஸ் போட்டு உள்ளனர் நெட்டிசன்கள்.
இதே போல் ரஜினி முருகன் படத்தில் வாழைபழத்தை எடுக்க முடியமாமல் ஒருவர் கஷ்டப்படுவாரே, அந்த காட்சியை வைத்து 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் , ஒரு வெற்றியை பெற கஷ்டப்படுவது போல் மீம் போட்டு ரசிகர்கள் கிண்டல் செய்துள்ளனர்.
மும்பை, சிஎஸ்கேவும் இம்முறை ஒரே மாதிரி விளையாடி தோற்பதை கிண்டலடிக்கும் வகையில் மாற்றான் படத்தில் சூர்யா இரட்டையர் போல் ஒன்றாக இருப்பார்களே, அது தான் சிஎஸ்கேவும், மும்பை இந்தியன்ஸ் அணியுமாம். இதே போல் சிஎஸ்கே எங்கே சென்றாலும், மும்பையும் அங்கு வந்து நிற்கிறது என்று எஸ்.எம்.எஸ். டெம்ப்ளேட் வைத்து கலாய்த்து இருக்கிறார்கள் நெட்டிசன்கள்.