ஐபிஎல் 2022-ம் ஆண்டுக்கான மெகா ஏலம் பெங்களூருவில் தொடங்கியது

bangalore ipl2022 iplauction megaauction startsinbangalore
By Swetha Subash Feb 12, 2022 06:50 AM GMT
Report

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2022-ம் ஆண்டுக்கான மெகா ஏலம் தொடங்கியது.

பெங்களூருவில் இன்றும் நாளையும் நடைபெறும் 10 அணிகளுக்கான ஐபிஎல் ஏலத்தில் 370 இந்திய வீரர்கள் மற்றும் 220 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 590 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

14 உள்நாட்டு வீரர்கள் மற்றும் 7 வெளிநாட்டு வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலம் எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இளம் தமிழக வீரர் ஷாருக் கானை ஏலத்தில் எடுக்கவும் சிஎஸ்கே அணி முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் மகேந்திர சிங் தோனி, ருதுராஜ் கெய்க்வாட். ரவீந்திர ஜடேஜா மற்றும் மொயீன் அலி ஆகியோர் தக்க வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஏலத்தில் முதல் வீரராக ஷிகர் தவான் 2 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்ட நிலையில் அவரை 8.25 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்துள்ளது.

தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை 5 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் அணியும் தென்னாப்பிரிக்க வீரர் ரபாடாவை 9.25 கோடிக்கு பஞ்சாப் அணியும் ஏலம் எடுத்தது.

மேலும் ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸை 7.25 கோடிக்கும், இந்திய வீரர் ஸ்ரேயஸ் ஐயரை 12.25 கோடிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

இந்தாண்டு ஐபிஎல் போட்டியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி, இந்திய வீரர் முகமது ஷமியை 6.25 கோடிக்கு வாங்கியுள்ளது.

மேலும், சிஎஸ்கே அணி வீரராக இருந்த ஃபாஃப் டு பிளெச்சிஸை இந்த முறை 7 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது.