கடைசி ஓவர்களில் மிக மோசமாக செயல்பட்ட சிஎஸ்கே அணி வீரர்கள் : குஜராத் அணிக்கு எளிய இலக்கு

TATA IPL IPL 2022
By Irumporai May 15, 2022 01:05 PM GMT
Report

குஜராத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்துள்ளது.

15வது ஐபிஎல் தொடரின் 62வது லீக் போட்டியான இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதி வருகின்றன.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை அணிக்கு டெவன் கான்வே 5 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். இதன்பின் களமிறங்கிய மொய்ன் அலி 21 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.  

இதன்பின் கூட்டணி சேர்ந்த ஜெகதீஷன் – ருத்துராஜ் கெய்க்வாட் ஜோடி, குஜராத் அணியின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டு ரன் சேர்த்தது. பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருத்துராஜ் கெய்க்வாட் 49 பந்துகளில் 53 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார்.

இதன்பின் களத்திற்கு வந்த சிவம் துபே டக் அவுட்டானர். கடைசி ஓவரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட தோனி 10 பந்துகளில் வெறும் 7 ரன்களும், இறுதி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிய ஜெகதீஷன் 33 பந்துகளில் 39 ரன்களும் எடுத்து கொடுத்துததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்துள்ள சென்னை அணி வெறும் 133 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் அதிகபட்சமாக முகமது ஷமி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.