ஆத்திரத்தில் நடுவரை கேவலமாக திட்டிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் : மாறிபோன ஆட்டம்

ipl2022 marcusstoinis
By Irumporai Apr 20, 2022 06:01 AM GMT
Report

ஐபிஎல் தொடரின் 31வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின இந்த போட்டியில் ஸ்டோய்னிஸ் கோபத்தின் உச்சிக்கே சென்ற சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரில்  ஆர்சிபி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் இதில் லக்னோ அணி தான் வெற்றி பெற்றிருக்க வேண்டியது. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்களை குவித்தது.

கேப்டன் டூப்ளசிஸ் 64 பந்துகளில் 96 ரன்களை விளாசினார். பின்னர் வந்த மேக்ஸ்வெல் 23 ரன்களும், சபாஷ் அகமது 26 ரன்களும் எடுக்க வலுவான நிலைக்கு சென்றது. கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணி முக்கிய விக்கெட்டுகளை இழந்த போதும், சீரான வேகத்தில் இலக்கை துரத்தியது.

கேப்டன் கே.எல்.ராகுல் 30 ரன்கள், க்ருணால் பாண்ட்யா 42 ரன்கள் என விளாசினர். இதனால் கடைசி 12 பந்துகளில் லக்னோ அணிக்கு 34 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ஜேசன் ஹோல்டர் இருந்தால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவே இருந்தது.

ஆனால் அப்போதுதான் சர்ச்சை கிளம்பியது. ஆட்டத்தின் 19வது ஓவரின் முதல் பந்தை ஹாசல் வுட் வைட்டாக வீசினார். ஆனால் நடுவர் அதற்கு வைட் கொடுக்கவில்லை. பேட்ஸ்மேன் ஸ்டோய்னிஸ் நகர்ந்துவிட்டதாக கூறி சரியான பந்து என அறிவித்தது ரசிகர்களுக்கே அதிர்ச்சி அளித்தது.

இதனால் கடும் ஆத்திரமடைந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் அடுத்த பந்தில் வேண்டுமென்றே வைட் லைனில் சென்று நின்றார். இதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட ஹாசல்வுட், பந்தை ஸ்டம்ப் லைனுக்கு வீசி, போல்ட் ஆக்கினார். கோபத்தின் உச்சிற்கே சென்ற ஸ்டோய்னிஸ், களத்தில் ஆக்ரோஷத்துடன் கத்தினார்

ஒரு கட்டத்தில் ஸ்டம்ப்பை உடைக்கும் அளவிற்கே சென்றுவிட்டார். இதனால் லக்னோ அணி 20 ஓவர்களில் 163 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.