ஐபிஎல்-இல் சென்னை, மும்பை அணிகளை தொடர்ந்து 3-வது சக்திவாய்ந்த அணியாக உறுவாகிறதா லக்னோ? வெளியான சுவாரஸ்ய தகவல்
ஐபிஎல் தொடருக்காக அனைத்து விதமான ஏற்பாடுகளையும் முடித்துவிட்டு அசுர பலத்துடன் களமிறங்க தயாராக உள்ளது லக்னோ அணி.
2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தை எதிர்நோக்கி தான் ரசிகர்கள் காத்துள்ளனர். குறிப்பாக 2 புதிய அணிகளின் பலங்கள் எப்படி இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் ஏலத்திற்கு முன்பாகவே 2 உள்நாட்டு வீரர்கள் மற்றும் ஒரு அயல்நாட்டு வீரரை நேரடியாக ஒப்பந்தம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இரண்டு அணிகளுமே கடந்த ஒரு மாதமாக தீவிர பேச்சுவார்த்தைகளுக்கு பின்பு தற்போது தங்களது தேர்வுகளை இறுதி செய்துள்ளன.
இதில் அகமதாபாத் அணி சூதாட்ட நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதாக எழுந்துள்ள புகாரால் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்திவைத்துள்ளது.
ஆனால் மறுபுறம் லக்னோ அணி பணிகளை முடித்தே விட்டது. அந்த அணியின் முதல் தேர்வாக பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் கே.எல்.ராகுல் தான் இறுதி செய்யப்பட்டுள்ளார்.
அவரை கேப்டனாக முன்னிறுத்தி ரூ.20 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிகிறது. இதே போல உலகின் முன்னணி சுழற்பந்துவீச்சாளரான ரஷித் கானையும் ரூ.16 கோடி வலைத்துப்போட்டது.
இந்நிலையில் மெகா ஏலத்திற்கு வீரர்களை தேர்வு செய்து ஏலம் எடுக்க பயிற்சியாளர் அவசியம் தேவை. எனவே அதற்காக ஜிம்பாவே அணியின் ஜாம்பவான் ஆண்டி ப்ளவரை தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது.
இவர் ஏற்கனவே பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு துணை பயிற்சியாளராக இருந்து வருவதால் ஐபிஎல் அனுபவம் அதிகம் உள்ளது.இவரை பயிற்சியாளராக்கினால் அட்டகாசமான தொடக்கம் கிடைக்கலாம் என்ற முடிவுடன் லக்னோ அணி உள்ளது.
கே.எல்.ராகுல் ஒரு கேப்டனாகவும் சரி, தனிப்பட்ட வீரராகவும் சிறப்பான செயல்பாடுகளை கொண்டுள்ளார். அவருடன் ஆண்டி ப்ளவர் கூட்டணி சேர்ந்தால் மிகவும் பலமான அணியாக லக்னோ உருவாகக்கூடும்.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவின் ஸ்டீபன் ஃப்ளெம்மிங் - தோனி மற்றும் மும்பையில் மஹிலா ஜெயவர்தனே - ரோகித் கூட்டணி மிகவும் வெற்றிகரமான ஒன்று.
அந்த வரிசையில் கே.எல்.ராகுல் - ஆண்டி ஃப்ளவர் ஜோடி இருக்கும் என நம்பப்படுகிறது.