ஐபிஎல் - பதம் பார்த்த மும்பை , ருத்ரதாண்டவம் ஆடிய பட்லர்
ஐபிஎல் 2022ஆம் ஆண்டு தொடரின் 9வது லீக் ஆட்டத்தில் மும்பை அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் மோதின. மும்பை அணி முதல் ஆட்டத்தில் தோல்வியை தழுவியதால், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்கியுள்ளது.
மும்பை அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் இன்றைய ஆட்டத்திலும் இல்லை. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக பட்லர் மற்றும் ஜெய்ஷ்வால் களமிறங்கினர்.
டெல்லிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் மும்பை பந்துவீச்சாளர்கள் மோசமாக பந்துவீசினர். குறிப்பாக பும்ரா ஒரு விக்கெட் கூட எடுக்காமல் அதிக ரன்களை விட்டு கொடுத்தார்.
இதனால் இம்முறை பும்ரா அபாரமாக பந்துவீசினார். முதல் ஓவரில் வெறும் 4 ரன்கள் மட்டுமே சென்றது.இதனையடுத்து சாம்ஸ் 2வது ஓவரை வீசினார்.
அதில் 2வது பந்தில் சாம்ஸ் வீசிய பந்து பட்லரின் விலா எலும்பை பதம் பார்த்தது. இதனால் பட்லர் கொஞ்சம் நிலை குலைந்து போனாலும், இது அவரை கோபப்படுத்தியது.
இதனையடுத்து சாம்ஸ் வீசிய 3வது பந்தை பட்லர் சிக்ஸ்க்கு விரட்டி தக்க பதிலடி தந்தார். பும்ரா வீசிய 3வது ஓவரில் ஜெய்ஷ்வால் ஆட்டமிழந்தார். இதன் பிறகும் சும்மா இருக்க கூடாது என்று நினைத்த பட்லர், தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பாசில் தம்பி வீசிய 4வது ஓவரில் பட்லர் ருத்ரதாண்டவம் ஆடினார்.
முதல் பந்து மட்டும் தான் ரன் போகவில்லை. 2வது பந்தில் பவுண்டரி விளாசிய பட்லர், மூன்றாவது மற்றும் நான்காவது பந்தில் ஜாஸ் பட்லர் தொடர்ந்து 2 சிக்சர் விளாச,5 வது பந்தில் ஒரு பவுண்டரியும், 6வது பந்தில் சிக்சரும் என மொத்தம் 26 ரன்களை பட்லர் விளாசினார்.தொடர்ந்து அதிரடி காட்டிய பட்லர் 32 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 8 விக்கெட்டை இழந்து 193 ரன்கள் எடுத்தனர். மும்பை அணியில் பும்ரா, மில்ஸ் தலா 3 விக்கெட்டை பறித்தனர்.