ஐபிஎல் இறுதிப்போட்டி இங்குதான் நடக்க உள்ளது : வெளியான முக்கிய தகவல்

final Narendra Modi Stadium ipl2022
By Irumporai Apr 13, 2022 12:25 PM GMT
Report

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் 2022 ஐபிஎல் இறுதிப்போட்டி மே 29ல் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறாமல் இருந்தது. இந்த ஆண்டு தொற்று பரவல் குறைந்திருப்பதால் ஐபிஎல் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில்  ஐபிஎல் டி20 தொடரின் 15வது சீசன் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி மும்பை வாங்கடே மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஐபிஎல் இறுதிப்போட்டி இங்குதான் நடக்க உள்ளது  : வெளியான முக்கிய தகவல் | Ipl 2022 Final Important Information

இந்த நிலையில் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகள் முறையே 2ம் இடத்திலும், 3வது இடத்திலும் உள்ளன.        

 தற்போது 2022 ஐபிஎல் இறுதிப்போட்டி மே 29ல் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஐபிஎல் பிளே ஆஃப் சுற்று போட்டிகள் கொல்கத்தா, லக்னோவில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.