ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி டெல்லி அபார வெற்றி

IPL IPL2022 DCVsKKR KKRVsDC
By Thahir Apr 10, 2022 03:48 PM GMT
Report

இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.

இன்றைய 19-வது லீக் ஆட்டத்தில் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ரி‌ஷப்பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.

மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து களம் இறங்கிய டெல்லி அணியில் துவக்க வீரர் ப்ரித்வி ஷா 29 பந்துகளில் 51 ரன்கள் அடித்தார்.

மற்றொரு துவக்க வீரர் டேவிட் வார்னர் 45 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். கேப்டன் ரிஷப் பந்து 27 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் குவித்தது இதையடுத்து 216 ரன்கள் என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா அணி களம் இறங்கி விளையாடியது.

துவக்க வீரர் ரகானே 8 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். வெங்கடேஷ் அய்யர் 18 ரன்னுடன் வெளியேறினார்.

அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 54 ரன்கள் குவித்தார். நிதிஷ் ராணா 30 ரன்கள் அடித்தார்.  கொல்கத்தா அணி 19.4 ஓவர் முடிவில் 171 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

இதையடுத்த 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.