ஐபிஎல் 2022: தோனியை 3 சீசன்களுக்கும் தக்கவைக்கும் CSK ?

மகேந்திர சிங் தோனி உள்பட மூன்று முக்கிய வீரர்களை ஏலத்தில் தக்க வைக்கவிருக்கும் CSK அணி நிர்வாகம் இதுவரை ஆடிய ஐபிஎல் தொடர்களை போல் இல்லாமல் வருகிற 2022-ல் ஆடவிருக்கும் தொடரில்,ஏற்கனவே பங்கேற்று விளையாடி வரும் 8 அணிகளுடன் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகளாக பங்கேற்கவிருக்கின்றன.

இந்த தொடருக்கான ஏலம் அடுத்த மதமான டிசம்பரில் நடக்கவிருக்கிறது.பிசிசிஐ விதிகளின்படி, ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக நான்கு வீரர்களை மட்டுமே தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பதால் அணிகளின் உரிமையாளர்கள் எந்தெந்த வீரர்களை ஏலத்தில் தக்கவைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.

மெகா ஏலத்தில் பங்கேற்கும் அணிகளின் உரிமையாளர்கள் வருகிற 30ம் தேதிக்குள், தக்கவைக்கப்பட இருக்கும் வீரர்களின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும்.என பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.

அடுத்து ஐ.பி.எல். தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்கவைக்கப்பட மற்றும் விடுவிக்கப்படவுள்ள வீரர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி அடுத்த மூன்று ஆண்டிற்கும் மகேந்திர சிங் தோனியை சென்னை அணியை வழிநடத்தும் கேப்டனாக தக்கவைத்திருக்கும் அணினியின் உரிமையாளர்கள் 2021 ஐபிஎல்லில் பட்டத்தை வெல்ல முக்கிய பங்கு வகித்த ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரையும் தக்கவைத்துக்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 4வது வீரருக்கு இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலியுடன் சிஎஸ்கே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது,மொயீன் அலி அணியில் தக்கவைக்கப்பட சம்மதிக்கவில்லை என்றால், இங்கிலாந்து அணியின் இடது கை நடுத்தர வேகப்பந்து வீச்சாளர் சாம் கர்ரண் தக்கவைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக சென்னை அணி சுரேஷ் ரெய்னாவை முதன்முறையாக தக்கவைக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்