கெத்தா...மாஸா..களம் இறங்கும் சென்னை அணி..போட்டி விவரம் இதோ..!
கிரிகெட் போட்டி என்றால் ரசிகர் பட்டாளத்திற்கு பஞ்சம் இருக்காது,அதுவும் ஐபிஎல் போட்டி என்றால் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கும்.
ஐபிஎல் போட்டியை பார்க்காதவர்கள் கூட போட்டி தொடங்கும் நேரம் வந்துவிட்டால் போதும் முதல் ஆளாய் டிவி முன் அமர்ந்துவிடுவார்கள்.
அதிலும் குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கும், தமிழகத்தில் மட்டுமில்லாமல் பல்வேறு மாநிலங்களிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர்கள் இருந்து வருகின்றன.
இதுவரை நடந்த 14 ஐபிஎல் போட்டிகளிலும் சென்னை,மற்றும் மும்பை அணிகள் அதிக முறை கோப்பையை வென்று வலுவான அணிகளாக உள்ளன.
சென்னை அணி தொடங்கப்பட்டதில் இருந்து தற்போது வரை சென்னை அணியின் கேப்டனாக எம்.எஸ் தோனி இருந்து வருகிறார்.
இந்நிலையில் ஐபிஎல் போட்டி அட்டவணை வெளியாகியுள்ளது.
மார்ச் 26 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை அணி கொல்கத்தா அணியோடு மோத உள்ளது.